மண்ணும் மனிதரும்

ஆசிரியர்: தமிழில் : டி.பி.சித்தலிங்கையா

Category நாவல்கள்
Publication சாகித்திய அகாதெமி
FormatPaperback
Pages 647
First EditionJan 1976
2nd EditionJan 2018
ISBN978-93-87567-57-3
Weight800 grams
Dimensions (H) 22 x (W) 12 x (D) 4 cms
$21      

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here

சிறப்பு மிளிரும் இந்தப் படைப்பு. கன்னட இலக்கியத்தின் கலங்கரை விளக்கம் என்று போற்றப்படும் சிவராம காரந்த் எழுதிய மூன்று தலைமுறைகளின் கதை. ஒரு கடலோர கிராமத்தில், பரம்பரையாக வரும் வேளாண்மைக் குடும்பத்தில் நவீன நாகரிகம் குறுக்கிடுகிறது. மகன். நிலத்தை விட்டு நகரத்துக்குச் சென்று தொழில் செய்கிறார். ஆங்கிலக்கல்வி பெற்ற இரண்டாம் தலைமுறை, மண்ணுடன் தனக்குள்ள உறவுகளை இழக்கிறது. மூன்றாம் தலைமுறை இதனால் வேலையில்லாத் திண்டாட்டத்தை எதிர்கொள்கிறது. பெருநகரங்களுக்கு இடம்பெயர்ந்து சென்று வாழ்க்கை நடத்த முயல்கின்ற பேரனுக்கு இந்த வாழ்க்கை கசக்கின்றது. இத்தகைய நெருக்கடியில் அந்தக் குடும்பப் பெண்கள் நிலைநிற்கவும் முன்னேறவும் போராடுகிறார்கள். மண்ணும், மழையும், கடலும் தங்களுக்குரிய மணத்தோடும் இயற்கை வண்ணங்களோடும் நாவலில் துள்ளுகின்றன. கன்னட நாவல்களில் இது ஒரு பொன்னான காவியம். சிவராம காரந்த்: சாகித்திய அகாதெமி விருது, ஞானபீட விருது உட்பட மிகப்பல உயர் விருதுகளைப் பற்ற அறிவுச்சிகரம். மனித வாழ்வில் இயற்கையின் பங்கு மற்றும் சுற்றுச்சூழலியல் பற்றிச் சிந்தித்த தொலைநோக்குப் பார்வை மிக்கவர். இவரது படைப்புகள் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. இதனை இனிய தமிழில் திறம்பட மொழிபெயர்த்தவர் இருமொழி அறிஞரான தி.ப. சித்தலிங்கையா. மதுரைப் பல்கலைக்கழகப் பேராசிரியராகவும், சாகித்திய அகாதெமி பொதுக்குழு உறுப்பினராகவும் பல அரும்பணிகள் செய்தவர்.
மனித வாழ்க்கையைப் பற்றிய அவரது அறி வும் அனுபவமும் பரந்தவை; ஆழ்ந்தவை; அரசியல்-சமூகப் போராட்டங்கள் அனைத்திலும் அவர் முழு மனத்தோடு குதித் திருக்கிறார். பின்னர் தமக்குக் கிடைத்த அனுபவங்களின் அடிப் படையில் அந்தப் போராட்டங்களை அலசிப் பார்த்திருக்கிறார். பழங்காலத்து வழிப்போக்கர்களைப் போல, கையில் தடி, துணி மூட்டை ஆகியவற்றுடன் அவர் கருநாடகம் முழுவதும் கால் தடையாகவே சுற்றிப் பார்த்திருக்கிறார். மேற்குத் தொடர்ச்சி மலைகளில் வாழும் மலைக் குடியினரின் வாழ்க்கை முறை களை அவர் கூர்ந்து கவனித்திருக்கிறார். அவர்களைப் பற்றித் தெளிவாகவும் இரக்கவுணர்வோடும் எழுதியிருக்கிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :