எனக்கு மட்டுமே தெரிந்த எம் ஜி ஆர்
ஆசிரியர்:
வழக்கறிஞர் குமார் ராஜேந்திரன்
விலை ரூ.0
https://marinabooks.com/detailed/%E0%AE%8E%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81+%E0%AE%AE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%87+%E0%AE%A4%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4+%E0%AE%8E%E0%AE%AE%E0%AF%8D+%E0%AE%9C%E0%AE%BF+%E0%AE%86%E0%AE%B0%E0%AF%8D+?id=1455-7705-8802-3225
{1455-7705-8802-3225 [{புத்தகம் பற்றி மக்கள் திலகம் டாக்டர் எம்.ஜி.ஆர் அவர்களைப் பற்றிப் பல கோணங்களில் பல நூல்கள் வெளிவந்திருக்கின்றன. அவருடன் நெருங்கிப் பழகிய நண்பர்கள், எழுத்தாளர்கள் என்று பல எழுதியிருக்கிறார்கள். இருந்தாலும், மக்கள் திலகத்தின் மனைவியாக வாழ்ந்த திருமதி.ஜானகி அம்மாளை விட, யார் அவரைப் பற்றி அறிந்துவிட முடியும்?
<br/>1967 ஆம் ஆண்டில் எம்.ஜி.ஆர் மீது குண்டு பாய்ந்து அவர் சிகிச்சை எடுத்த போதும், 1983க்குப் பிறகு அவர் மருத்துவச்சிகிச்சை மேற்கொண்ட போதும் அவரை உடனிருந்து கவனித்து மீட்டெடுத்து வந்தவர் எங்களால் “தோட்டத்தம்மா என்று அழைக்கப்பட்ட தமிழகத்தின் முதல் பெண் முதல்வரான ஜானகி அம்மாள்.
<br/>'தாய்' வார இதழில் மக்கள் திலகம் அவர்களைப் பற்றி ஜானகி அம்மா எழுதிய தொடரின் தொகுப்பே இந்த நூல். எம்.ஜி.ஆரின் மீது மிகுந்த அன்பு கொண்டிருக்கும் அவருடைய ரசிகர்களுக்கும் தொண்டர்களுக்கும் இந்த நூல் நிச்சயம் பிடிக்கும். அந்த அளவுக்குத் தன்னுடைய அனுபவங்களை அன்பு கலந்த மொழியில் பதிவு செய்திருக்கிறார் ஜானகி அம்மாள்.
<br/>திரையிலும், அரசியலிலும் பெரும் சாதனையை நிகழ்த்திய புரட்சித்தலைவர் அவர்கள் நினைவு கூறப்படும் போது, அவருடைய வாழ்வின் நிழலாக இருந்த திருமதி.ஜானகி அம்மாவும் நினைவு கூறப்பட வேண்டும் என்பதே எங்களுடைய விருப்பம்.அவர் இந்தத் தொடர் எழுதக்காரணமாக இருந்த ஆசிரியர் திரு.வலம்புரி ஜான் உட்பட ஆசிரியர் குழுவினருக்கும், உரிமையாளருக்கும் இந்தச் சந்தர்ப்பத்தில் எனது நன்றியை எங்களுடைய குடும்பத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866