Useful Idioms and Phrases For Spoken English

ஆசிரியர்: என். வீரண்ணன்

Category மொழிபெயர்ப்பு
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 160
ISBN978-81-8446-468-1
Weight150 grams
₹100.00 ₹90.00    You Save ₹10
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



இன்றைய இளைய தலைமுறையினர் ஆங்கிலத்தில் பேச வேண்டிய ஒரு கட்டாயத்தில் உள்ளனர். அவர்கள் தங்கள் படிப்பை முடித்துவிட்டு வேலைக்குச் செல்லும் காலத்தில் மற்ற மொழி பேசுபவர்களுடன் தொடர்பு கொள்ளப் பொதுவாக இருக்கும் மொழியான ஆங்கிலத்தைப் பயன்படுத்தும் ஓர் அவசியம் அவர்களுக்கு இருக்கிறது. பொதுவாக, ஆங்கில வழியில் கல்வி பயின்றவர்கள் எந்தவிதச் சிரமமும் தயக்கமும் இன்றி ஆங்கிலத்தில் பேசிவிடுகின்றனர். ஆனால் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களுக்கு தவிர்க்கமுடியாத சில தடைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவர்கள் தங்களின்கடுமையான முயற்சியால் ஆங்கிலத்தில் பேசும் கலையை வளர்த்துக் கொண்டாலும் சரளமாகப் பேசப் பழகியவர்கள் பேச்சின் இடைஇடையே பயன்படுத்தும் சிறப்புச் சொற்றொடர் களையும் (phrases) மரபுத் தொடர்களையும் (idioms) புரிந்து கொள்ள முடியாமல் தடுமாறுவது இயற்கையே. அந்தத் தடுமாற்றத்தைப் போக்குகின்ற வகையில் ஆங்கிலத்தில் பொதுவாகப் பயன்படுத்தப்படும் சிறப்புச் சொற்றொடர்களையும் மரபுத் தொடர்களையும் தமிழ்விளக்கங்களுடனும் எடுத்துக்காட்டு வாக்கியங்களுடனும் தொகுத்து கொடுத்துள்ளளேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
என். வீரண்ணன் :

மொழிபெயர்ப்பு :

விஜயா பதிப்பகம் :