Esso Dictionary (Eng-Tam-Eng)

ஆசிரியர்: பி. யசோதா

Category அகராதி
FormatPaperback
Pages 536
Weight250 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அரசுத்துறைகள், பொதுமக்கள், வளரும் மாணவர்கள்; ஆய்வாளர்கள் என்று ஒரு சமுதாயத்தில் வேறுபட்ட கல்வித்தரம், தொழில், வாழும் வகை ஆகியவற்றால் மொழி சிக்கிக்கொண்டு படாதபாடு படுகின்றது. அவரவர் நிலைக்கேற்ற தனிநடை தேவையாகின்றது.
தமிழ்நாட்டு அரசின் ஆட்சிமொழிச் சார்பான தொடர் நடவடிக்கையால், போதிய தமிழே அறியாது உயர்பதவி வகித்து ஓய்வுறுவோர் எண்ணிக்கை குறைந்து வருகின்றது. எனவே மாணவப் பருவத்தில் அனைத்து மாணவர்களுக்குத் தமிழ் இலக்கியத்தில், குறிப்பாகப் பண்டைத் தமிழ் இலக்கியங்களில் நல்ல பயிற்சியும் முயற்சியும் வேண்டும். தமிழ் மொழியிலும் ஆங்கில மொழியிலும் நல்ல புலமைத் தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். மற்ற மொழிகளைக் கற்பதில் தவறில்லை. அறிஞர் அண்ணா கூறியது போல் தமிழ் அனைத்துத் துறைகளிலும் வளர வேண்டும்.
இந்தக் கையடக்க அகராதியில் அறிவியல், மொழி நூல், சுற்றுச்சூழல், மாசுக்கட்டுப்பாடு, மருத்துவம், சட்டம், ஆட்சித் துறை போன்ற பல துறை சார்ந்த சொற்கள் இடம் பெற்றுள்ளன.

உங்கள் கருத்துக்களை பகிர :
அகராதி :

கௌரா பதிப்பக குழுமம் :