BOX கதைப் புத்தகம்
ஆசிரியர்:
ஷோபா ஷக்தி
விலை ரூ.200
https://marinabooks.com/detailed/BOX+%E0%AE%95%E0%AE%A4%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D?id=4+3004
{4 3004 [{புத்தகம் பற்றி ஈழத் தமிழர்களின் அரசியல் வரலாற்றை, தொடர்ச்சியாகத் தன் படைப்புகளில் பதிவுசெய்துவரும் ஷோபாசக்தியின் ‘பாக்ஸ்’ நாவல், போருக்குப் பிறகான சூழலின் ‘புதிய’ துயரங்களைப் பேசுகிறது. இலங்கையில் நடைபெற்ற இறுதிப்போர், தமிழர்கள் ஒவ்வொருவரின் மனநிலையையும் எப்படிக் குலைத்திருக்கிறது என்பதை, தேர்ந்த மொழிநடையில் காட்சிப்படுத்தியிருக்கிறார் ஷோபாசக்தி. சொந்தக் கிராமங்களில் இருந்து வேரோடு பிடுங்கி எறியப்படும் அவலம், முன்னாள் போராளிகளின் இன்றைய இருப்பு என வெவ்வேறுவிதமான உணர்வு நிலைகளை நாவல் பதிவுசெய்கிறது. கார்த்திகை என்னும் போராளியின் மரணத்தை, ஊரே ஒரு துயர விளையாட்டாக நடித்துக் காட்டும் இடம் நிச்சயம் நம் மனசாட்சிக்கான பரிசோதனை முயற்சிதான். பாக்ஸ் என்னும் போர் உத்தி எப்படி ஒரு கிராமத்தின் ஆழமான வடுவாக உறைந்திருக்கிறது என்பதை அழுத்தமாகச் சொல்கிறது நாவல். வரலாற்றில் தோற்கடிக்கப்பட்டவர்களின் வலியை உரக்கச் சொன்னவகையில், ‘பாக்ஸ்’ ஒரு முக்கியமான நாவல்!} {பதிப்புரை 'கொரில்லா ', 'ம்' நாவல்களைத் தொடர்ந்து வெளியாகும் ஷோபாசக்தியின் மூன்றாவது நாவல். முள்ளிவாய்க்காலிற்குப் பின்னான வன்னிக் கிராமமொன்றின் கதைப் பிரதி.}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866