30 நாள் 30 சமையல்
ஆசிரியர்:
ரேவதி சண்முகம்
விலை ரூ.180
https://marinabooks.com/detailed/30+%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%B3%E0%AF%8D+30+%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%88%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D?id=1260-6393-4784-2349
{1260-6393-4784-2349 [{புத்தகம் பற்றி ஒரு காலத்தில் வீட்டை மட்டுமே கவனித்துக் கொண்டிருந்த பெண்கள் சமையல் வேலைகளில் தனிச் சிறப்புடன், அபாரமான கைப்பக்குவத்துடன் அதில் கவனம் செலுத்தி வந்தார்கள். 'என்ன சாப்பாடு செய்யலாம், என்ன குழம்பு வைக்கலாம்?' என்று சிந்தித்து, ருசியாகச் சமைத்து வீட்டிலுள்ளவர்களுக்குப் பரிமாற நேரம் இருந்தது. ஆனால், இப்போது பல இல்லத்தரசிகள் வேலைக்கும் சென்று அலுவலக வேலைகளையும் சுமக்க ஆரம்பித்து விட்டார்கள்.பலவிதமான மக்களுடன் நெருங்கிப் பழகி வேலை செய்துவரும் சூழ்நிலையில், அவர்களது நடை, உடை, கலாசாரத்தைக் கற்றுக்கொண்டது போல, உணவு பழக்க வழக்கங்களிலும் அவர்களிடம் உள்ள சிறப்பான விஷயங்களைக் கற்றுக்கொள்ளத் துவங்கிவிட்டார்கள்.ஆக, நமது உணவுக் கலாசாரமும் மாறிவிட்டது.சுருக்கமான செலவில் வீட்டிலுள்ள சமையல் பொருட்களைக் கொண்டே விதம் விதமான _ சுவையான சமையல் வகைகளைச் செய்து ருசிக்க வேண்டும் என்று விரும்புகிறவர்களுக்கு, இந்த '30 நாள் 30 சமையல்' புத்தகம் ஒரு வரப்பிரசாதம்தான். இந்த சமையல் குறிப்புகள் அவள் விகடன் இதழுடன் இணைப்புகளாக வெளிவந்தபோதே வாசகிகளிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.கலந்த சாதம் முதற்கொண்டு, ஊறுகா} {பதிப்புரை கவியரசர் கண்ண தாசனின் பெயர் அவருடைய கவிதைகளில் ஜொலிப்பது போல, அவருடைய மகள் ரேவதி சண்முகம் சமையல் கலையில் நிபுணராக ஜொலிக்கிறார். செட்டிநாட்டு சமையலுக்குக் கூடுதல் சிறப்பளிக்கும் சைவம், அசைவம் இரண்டிலுமே நாக்கைச் சப்புக்கொட்ட வைக்கும் அளவுக்குப் பக்குவமாக சமையல் செய்து அசத்துபவர் ரேவதி சண்முகம். இவரது கைவண்ணத்தில் உருவாகி, விகடன் வெளியீடுகளாக மிளிரும் 'வெரைட்டி ஃபாஸ்ட்ஃபுட்', 'முப்பது நாள் முப்பது சமையல்', 'முப்பது நாள் முப்பது ருசி' மற்றும் 'முப்பது நாள் முப்பது சுவை" ஆகியவை இவருக்கு மிக்க புகழ் சேர்க்கின்றன. தணிக்கைக் குழு முன்னாள் உறுப்பினர், பூச்செடிகள் விற்பனையாளர், தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர் என்று இவருக்குப் பல்வேறு முகங்கள் இருந்தாலும் சமையல் கலையில் மட்டும் பிரத்யேகக் கவனம் செலுத்தி வருகிறார். 'சிருஷ்டி' என்ற சமையல் உலகத்தை உருவாக்கி, பல பெண்களுக்கு வேலை கொடுத்து, சுவைமிக்க உணவு வகைகளை, ஆர்டர் கொடுப்பவரின் வீடுகளுக்கே அனுப்பி வைக்கிறார். 'சமையல் கலை என்னும் விருந்தையும் இதோ உங்கள் வீடு தேடி அனுப்பியிருக்கிறார்.
<br/>} {ஆசிரியர் உரை மாதத்தில் முப்பது நாட்களுக்கும் தினம் ஒரு தினுசாக கலந்த சாதம், ருசியில் புதுசாக டிபன் வகைகள், அசத்தல் வாசனையோடு குழம்பு வகைகள், விதம் விதமான சட்னி வகைகள், சுவையான பொரியல் வகைகள், சத்தான கீரை - வகைகள், உச்சிவரை சுண்டியிழுக்கும் விறுவிறு ஊறுகாய்கள், அவசர உணவுக்கு அசத்தலான பொடிகள், திடீர் சமையலுக்கு ரெடி மிக்ஸ், பண்டிகை நாட்களில் செய்து அசத்த பலகார வகைகள்... என்று இந்த சமையல் குறிப்புகள் எல்லாம் 'அவள் விகடன்' இதழுடன் இணைப்புகளாக வெளியிடப்பட்டு பல இல்லத்தரசிகளின் பாராட்டுகளையும் பெற்றது. இப்போது அனைவருக்கும் பயன்படும் விதமாக அனைத்து சமையல் வகைகளையும் ஒரே புத்தகமாக வெளியிடும் எண்ணத்துடன் அதைச் செயலாக்கிய அவள் விகடன் ஆசிரியர் ஸ்ரீ அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்!
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866