1858-1948

ஆசிரியர்: அறிஞர் அண்ணா

Category கட்டுரைகள்
Publication பாரி நிலையம்
FormatPaper back
Pages 90
Weight100 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்த விசித்திரமான கேள்விக்கு இன்று அவசியம் ஏற்பட்டுவிட்டது.
ஏகாதிபத்தியத்தின் பிடியிலே சிக்கிச் சிதைந்து, பிறகு எழுச்சி பெற்று எதிர்த்துத் தாக்குதலை நடத்தி வந்தவர்களுக்கு, இந்தச் சந்தேகம் ஏற்படவேண்டிய அவசியம் உண்டானது கூட அவ்வளவு ஆச்சரியமில்லை; ஏகாதிபத்யத்துக்கே இன்று அந்தச் சந்தேகம் ஏற்பட்டு விட்டிருக்கிறது! அந்தப் பகுதிதான் ஆச்சரியமிகுந்தது.
'புலி இறந்து விட்டதா, புதருக்குப் பின்புறத்தில் பதுங்கிக்கொண்டிருக்கிறதா' என்று வேட்டைக்காரன் சந்தேகப் படுவதோடு இல்லை; புலிக்கே ஏற்பட்டிருக்கிறது அந்தச் சந்தேகம்.
"நான் இருக்கிறேனா, இறந்துவிட்டேனா'' என்று ஏகாதிபத்யமே இன்று தன்னைத்தானே கேட்டுக்கொள்கிறது!"
வேடிக்கை இத்துடன் நின்றுவிடவில்லை. "என்னையா இவ்வளவு தைரியமாக, இந்தியாவைவிட்டு வெளியே போ என்று சொல்லுகிறாய்' என்று, நாலு ஆண்டுகளுக்கு முன்பு - கர்ஜித்த ஏகாதிபத்தியம், இப்போது 'நான் நாள் பார்த்தாகி விட்டது இந்தியாவை விட்டு வெளியேற" என்று தெரிவிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அறிஞர் அண்ணா :

கட்டுரைகள் :

பாரி நிலையம் :