வினயா ஒரு பெண்காவலரின் வாழ்க்கைக் கதை

ஆசிரியர்: குளச்சல் மு. யூசுப்

Category சுயசரிதை
Publication எதிர் வெளியீடு
FormatPaperback
Pages 216
ISBN978-93-90811-48-9
Weight300 grams
₹250.00 ₹237.50    You Save ₹12
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பிறந்த வீடுகளே புகுந்த வீட்டிற்கான பயிற்சி நிறுவனமாக மாறுவதிலிருந்து ஒரு பெண்ணின் இந்த சுயவதைப்படலம் துவக்கம் பெறுகிறது. சமூக அமைப்பின் எல்லா அம்சங்களுமே புகுந்த வீடுகளின் தன்மைகளுடன்தான் வினயாக்களிடம் நடந்து கொள்கின்றன. தளையத் தளைய உடுத்தும் பன்னிரெண்டு முழ சேலையையும் நிலம் பதியும் நீள் கூந்தலையும் வினயா காலாசாரக் கருதுகோளாகப் பார்க்க மறுக்கிறார். உளவியல் ரீதியாக, சிந்தனையைத் தனக்குள் தளைத்துப்போடும் அடிமைத் தனத்தின் துணைக்கருவியாகவே பார்க்கிறார். கோபம் வரும்போது கணவனுக்குப் பற்றிப் பிடிக்கத் தோதுவான கார்குழலையும் இழுத்துப் போர்த்துவதன் மூலம் ஆண்களுக்குத் தரும் குறைந்தபட்ச அங்கீகாரமான சேலையையும் பெண்மையின் அடையாளங்களாகச் சுமந்துத் திரிய அவர் மறுக்கிறார்.
சட்ட ஒழுங்குகளின், அதிகாரத்தின் உச்சபட்ச அமைப்பிற்குள் தனது பெண்ணுரிமை வாதங்களைத் தனியொரு பெண்ணாக நின்று அமுல்படுத்தப் போராடியிருக்கிறார் வினயா. இதற்கானக் காலம் கனிந்திருப்பது போன்ற தோற்றங்கள் எல்லாம் வெறும் புறச்சூழல்கள்தான் என்பதை அனுபவங்கள் மூலம் அவர் புரிந்து கொள்வதுதான் இந்த சுயசரிதை நூல்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குளச்சல் மு. யூசுப் :

சுயசரிதை :

எதிர் வெளியீடு :