குழந்தைகளுக்கு பரமார்த்தகுரு கதைகள்

ஆசிரியர்: பாலமுருகன்

Category சிறுகதைகள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 136
Weight150 grams
₹45.00 ₹38.25    You Save ₹6
(15% OFF)
Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866பரமார்த்த குருவுக்கும் அவரது சீடர்களுக்கும் குதிரை மீது இருந்த ஆசையும், அதை அடைய அவர்கள் பட்ட துன்பமும், வேடிக்கைகளும் நம்மைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கும். இறுதியில் குதிரைகிடைத்த பின் அதனால் ஏற்படும் துன்பங்களும் வேடிக்கைக்குக் குறைவு வைக்கவில்லை. இறுதியில் இந்தக் குதிரையே வேண்டாம் என அவர்கள் எண்ணும் வகையில் அவர்கள் படும் துன்பங்களும் அமைகின்றது.
சிரிக்க வைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக எழுதப்பட்ட கதைகள் இவை. எனினும் இக் கதைகள் மாணவர்களை சிந்திக்கவும் வைக்கும் என்பதும் உண்மையே. பெரிய எழுத்துடன், மிகுதியான படங்கள் இந்நூலை அழகு செய்கின்றது. இந்நூலுக்கு ஓவியம் வரைந்த நண்பர் ஓவியர் ராமு அவர்களுக்கு நன்றி.
இக்கதைகள் சுப்ரதீபக் கவிராயரால் எழுதப்பட்டு வீரமாமுனிவர் பெயரில் வெளிவந்தது என்பது சிலரின் ஐயம்.எது எப்படியிருந்தாலும் அனைவரும் படித்து, சிரித்து, சிந்தித்து மகிழ வேண்டிய கதை இது என்பதில் எள்ளளவும் ஐயம் இல்லை. இதைப் படித்த பின் இக்கூற்று உண்மையே என்பதைத் தாங்கள் உணர்வீர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலமுருகன் :

சிறுகதைகள் :

சங்கர் பதிப்பகம் :