ஹெலன் கெல்லர்

ஆசிரியர்: க. சாந்தகுமாரி

Category கட்டுரைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaper Back
Pages 96
Weight150 grams
₹60.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866உலகத்தில் பிறந்த எல்லோரும் நலமாகவும் வளமாகவும் வாழ வேண்டும் என்றே விரும்புகின்றனர். ஆனால் இயற்கையும் காலமும் அப்படி நினைப்பதில்லை. காலச்சூழல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொருவிதமாக அல்லவா இருக்கிறது. மற்ற பெண்களைப் போலவே அழகாகப் பிறந்தவள் தான் ஹெலன் கெல்லர். ஆனால் ஒன்றரை வயதிலேயே ஏற்பட்ட கொடிய நோயினால் மிகவும் பாதிக்கப்பட்டுச் சாவிலிருந்து மீண்டவளாய்த் தன்னுடைய கண்பார்வையையும் பேசுந்திறனையும் இழந்துவிட்டாள், தாயின் அரவணைப்பில் வீட்டுச் சூழ்நிலைகளைப் புரிந்துகொண்டாள்.
ஸல்லியன் என்றோர் ஆசிரியை அவருக்குக் குருவாக அமைந்து அவளுடைய கடவுளாகவே மாறிவிட்டார் எனலாம். ஹெலன் கெல்லருக்கு வேண்டிய அனைத்தையும் கற்றுக்கொடுத்து 12ஆம் வயதிலேயே கதையெழுதும் அளவுக்கு ஆற்றலை வளர்த்துவிட்டார். கண்பார்வை இல்லை என்ற கவலையே இல்லாமல் கற்க வேண்டியவற்றைக் கற்றார். நன்றாகக் கவிதை எழுதும் ஆற்றலைப் பெற்றார். உலக நாடுகளுக்குகெல்லாம் சுற்றுப்பயணம் செய்தார். கண்பார்வையற்றவர்களுக்கும் பேச முடியாதவர்களுக்கும் மனம் உண்டு, இதயம் உண்டு, உணர்ச்சி உண்டு என்று எடுத்துக்கூறி உலகநாடுகள் அவர்களுக்கு அங்கீகாரம் அளிக்கப் பாடுபட்டாள். உலகநாடுகளிடமிருந்து பார்வையற்றோர்களுக்கெனப் பெருநிதியைத் திரட்டி அவர்களுக்கு மறு வாழ்வளித்தார். கடைசிக் காலங்களில் பேச்சுத்திறனையும் பெற்றார். தம் கருத்துகளைத் தடைவிடைகளோடு ஆணித்தரமாக எடுத்துரைத்து உலக அரங்கிலே உச்சத்தில் நின்றாள். முயற்சி திருவினையாக்கும் என்பதற்குச் சான்றானார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
க. சாந்தகுமாரி :

கட்டுரைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :