ஹரியின் தெய்வீகப் பாதை

ஆசிரியர்: ஏ.ஆர். ராமசாமி

Category ஆன்மிகம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 72
Weight50 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



ஜோதிடஞானியுமான டாக்டர் திரு. A.R. ராமசாமி அவர்களின் 'ஹரியின் தெய்வீகப் பாதை' என்னும் இந்த 27 அபங்கங்கள் கொண்ட கவிதை நூலானது ஒரு அரிய முயற்சி. முழு முதற் கடவுளாகிய விஷ்ணுவின் அவதாரங்கள் மொத்தம் பத்து என்பதை அனைவரும் அறிவோம். அதில் ஒன்பது அவதாரங்கள் ஈடேறி விட்டன. பத்தாவது அவதாரமான கல்கி அவதாரத்திற்காக கலி காத்துக் கொண்டிருக்கிறது.அப்படிப்பட்ட இந்தக் கலியில் நாம் நம்மைக் காத்துக் கொள்ளவும், மாயையில் சிக்காது இருக்கவும், ஞானிகளும் மகான்களும் பலவித வழிமுறைகளைக் கூறியுள்ளனர். அதில் அனைவரும் பின்பற்றும் ஒரு எளிய முறைதான் 'ஹரிநாம ஜெபம்'.
ஹரியாகிய விஷ்ணுவுக்கு நாராயணன் என்றும், மாதவன் என்றும், முகுந்தன் என்றும், ராமன் என்றும் எவ்வளவோ நாமங்கள். இதில் ஹரி நாமம் அந்த பிரகலாதனால் பெரிதும் ஜெபிக்கப்பட்ட ஒன்றாகும்...

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆன்மிகம் :

சங்கர் பதிப்பகம் :