ஸ்ரீ ரமண மஹர்ஷி

ஆசிரியர்: வே.சு.ரமணன்

Category ஆன்மிகம்
Publication ஸ்ரீரமணாச்ரமம்
FormatPaperback
Pages 68
ISBN978-81-88225-17-0
Weight200 grams
₹50.00       Only 4 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அருணாசலம் என்னும் சுயம்புவாக விளங்கும் தேஜோலிங்கத் தலமாம் திருவண்ணாமலையில், அருணாசல நினைப்பு மாத்திரத்தால், பால்யத்திலேயே ஆத்ம ஞானம் அடைந்து ஸகஜ நிஷ்டாபரராக விளங்கிய பகவான் ஸ்ரீ ரமண மஹர்ஷிகளை அறியாதார் யாரும் இலர். அன்னாரின் திவ்ய சரித்திரத்தைச் சுருங்கக் கூறும் ஸ்ரீ ரமண மஹர்ஷி என்னும் இவ்வழகிய தமிழ் நூல், சென்னை ஸண்டே டைம்ஸ் ஆசிரியராக இருந்து, நம் நாட்டின் அரசியல் அறிவும் ஆன்றோர் கலைகளும் பரவ முயற்சி மிகச் செய்து புகழுடல் எய்திய எம்.எஸ்.காமத் அவர்கள் எழுதிய ஆங்கில முதல் நூலைத் தழுவியது. ஆசிரியரின் எளிய நடையும் இடையே இலகும் சித்திரங்களும் மக்கள் மனத்தை கவர்ந்தன.
ஆங்கில நூல் பிரசித்தி அடைந்து பல பதிப்புகள் ஆயின. அதன் ஹிந்தி, தெலுங்கு, மொழிபெயர்ப்புகளும் வெளிவந்தன. பிறகு இந்தத் தமிழ் நூலை எழுதும் கைங்கரியத்தை, காலஞ்சென்ற பக்தர் இ.ஆர். கோவிந்தன் அவர்கள் அன்புடன் ஏற்றுக்கொண்டார். மற்றும் மலையாளம், குஜராத்தி மொழிகளிலும் இந்நூல் வெளிவந்ததிலிருந்தே இதன்பால் மக்களுக்குள்ள விருப்பம் விளங்கும். தமிழ் மொழியில் இந்நூல் இருபதாம் பதிப்பாக வெளியிடப்படுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வே.சு.ரமணன் :

ஆன்மிகம் :

ஸ்ரீரமணாச்ரமம் :