ஸ்ரீ ரமண மகரிஷியின் பொன்மொழிகள்

ஆசிரியர்: லா.சு.ரங்கராஜன்

Category ஆன்மிகம்
Publication ஸ்ரீரமணாச்ரமம்
FormatPaperback
Pages 293
ISBN978-81-88225-62-0
Weight350 grams
₹90.00 ₹81.00    You Save ₹9
(10% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866நான் யார்? எனும் புதிய நேரடி ஆன்ம ஞான விசார மார்க்கத்தை நவீன உலகில் உண்மை நாடுவோர் அனைவர்க்கும் ஜாதி மத இன பேதம் ஏதுமின்றி அறிவுறுத்திய பகவான் ஸ்ரீ ரமண மகரிஷி, தமிழ் பக்தர்கள் அன்பர்கள் எழுப்பிய வினாக்களுக்கும் ஆன்மீக ஐயப்பாடுகளுக்கும் தெளிவாய் வள்ளியதாய் விடைகள் வழங்கி வந்தார்.
ஸ்ரீ ரமணரின் உபதேசங்களால் ஈர்க்கப்பட்டு, பல்லாண்டுகள் ரமணாச்ரமத்திலேயே தங்கி தொண்டு புரிந்து வந்த ஆங்கிலேய அறிஞர் ஆர்தர் ஆஸ்போர்ன், பகவானின் விடைகளைப் பொருள்வாரியாகத் தேர்ந்தெடுத்துத் தக்க விளக்கக் குறிப்புகளுடன் எழுதிய The Teachings of Ramana Maharshi in His Own wards என்ற பிரபல நூலின் பல பதிப்புகள் வெளிநாடுகளிலும் இந்தியாவிலும் வெளிவந்துள்ளன. அதன் தமிழ் வடிவமே இந்நூல்.
ஸ்ரீ ரமணர் மிகப் பெரும்பாலும் தமிழிலேயே உரையாடினார். அன்னாரது ஆதாரபூர்வமான வாசகங்களைத் திரட்டி, மூல ஆசிரியரின் விளக்கக் குறிப்புக்களையும், தமிழில் கிடைக்கப்பெறாத விடைகளையும் மொழிபெயர்த்து அளித்துள்ளார் எழுத்தாளர் லா.சு. ரங்கராஜன்.சத்தியத்தின் வாய்மொழியே மகரிஷி ரமணரின் பொன்மொழிகள், இந்த உரையாடல்களின் வாயிலாய் ஆன்ம சாசுவத சொரூபமாம் பகவான் ரமணர் நம்முடன் நேருக்கு நேர் பேசுகிறார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
லா.சு.ரங்கராஜன் :

ஆன்மிகம் :

ஸ்ரீரமணாச்ரமம் :