ஸ்ரீ கிருஷ்ண அந்தாதி

ஆசிரியர்: கவிஞர் கண்ணதாசன்

Category ஆன்மிகம்
Publication கண்ணதாசன் பதிப்பகம்
FormatPaper back
Pages 96
ISBN978-818402-027-4
Weight150 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



அபிராமி அந்தாதியைப் படித்தபோது அப்படி ஒரு அந்தாதி எழுத வேண்டும் என்ற ஆசை எனக்கெழுந்தது. முதலில் எங்கள் கிராம தேவதை 'மலையரசி அம்மனைப் பற்றி எழுதலாம் என்று கருதினேன். என்ன காரணத்தாலோ அந்த முயற்சி ஒத்திப் போடப்பட்டே வந்தது. கடைசியாகக் கிருஷ்ணன் பேரில் ஒரு அந்தாதி எழுதலாம் என்றெண்ணியபோது, அன்றே அந்த முயற்சியைத் தொடங்க முடிந்தது. அதற்குக் கிருஷ்ணனைத் தவிர வேறு காரணம் என்னால் சொல்ல முடியவில்லை.அந்தாதிக்கு ஒரு இலக்கணம் உண்டு. கட்டளைக் கலித்துறையில் நேரசை என்றால் ஒற்று நீக்கிப் பதினாறு எழுத்துக்களும், நிரையசை என்றால் பதினேழு எழுத்துக்களும் இருக்க வேண்டும் என்பது மரபு. அந்த மரபின்படி நான் இதை எழுதவில்லை. 'இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல்' என்ற மரபின்படி, இதை ஒரு புதிய வழியாக எழுதினேன். எழுத்துக்களை எண்ணிக் கொண்டு கருத்துக்களைச் சிதறடிப்பதைவிட, ஒரு புதிய வழியை உற்பத்தி செய்து கொள்வது தவறல்ல என்பது என் துணிபு விகற்பங்கள் மிகுந்த விருத்தத்தில் இராமகாதை எழுதிய கம்பன், எல்லா விகற்பங்களுக்கும் தன்னை ஆட்படுத்திக் கொண்டான். விருத்தத்தில் உள்ள வசதி கலித்துறையில் இல்லை. என்றாலும், அப்படி ஒரு வசதியை உண்டாக்க நான் துணிந்தேன். இத்தகைய வசதிகளுக்குத் தமிழ் இலக்கணம் தாராளமாக இடமளிக்கிறது. எந்தப் பாடலிலும் ஓசை ஒழுங்கு கெடாமல் இதனை நான் எழுதியிருக்கிறேன். முதற் பாடலின் ஆதியை, நூறாவது பாடலின் அந்தமாகவும் ஆக்கியிருக்கிறேன்.


உங்கள் கருத்துக்களை பகிர :
கவிஞர் கண்ணதாசன் :

ஆன்மிகம் :

கண்ணதாசன் பதிப்பகம் :