ஸ்ரீ அருணாசல புராணம்

ஆசிரியர்: சைவ எல்லப்ப நாவலர்

Category ஆன்மிகம்
Publication ஸ்ரீரமணாச்ரமம்
FormatPaperback
Pages 299
ISBN978-81-8288-013-9
Weight400 grams
₹110.00 ₹99.00    You Save ₹11
(10% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866மதுரையில் மரணானுபவமுற்ற தருணத்திலிருந்து ஆத்ம சொரூபத்தில் நிலைபெற்ற பகவான் ரமணர், ஜீவர்கள் நற்கதியடையும் பொருட்டாக உபதேசித்த சாதனாமுறைகளில் அருணாசல பக்தி மார்க்கமும் ஒன்று. "கருத்தினால் தூரக் கருதினாலும்மே", "யோசனை மூன்றாம் இத்தல வாசற்கு'' என்று தொடங்கும் இரு பாக்களால், முக்தி யடையும் சுலபமான வழிகளாக அவர் அருணாசல ஸ்மரணத்தையும் வாசத்தையும் உலகிற்கு பறைசாற்றியுள்ளார். அடியார்களின் அருணாசல பக்தி உபாசனைக்காக அவர் இயற்றியருளியுள்ள ஒரே துதி நூல் "அருணாசல ஸ்துதி பஞ்சகம்.'' ஸ்காந்த மகாபுராணம், சிவரஹஸ்யம், சிவமகாபுராணம், ஸ்காந்தோப்புராணம் ஆகிய புராணங்களிலுள்ள அருணாசல மகத்துவத்தைக் குறிக்கும் 2659 வடமொழி சுலோகங்களைத் தேர்ந்தெடுத்து “ஸ்ரீ அருணாசல மாஹாத்மியம்" என்ற தலைப்பில் தம் திருக்கரங்களாலேயே அவற்றை எழுதியருளியுள்ளார். தமிழில் சைவ எல்லப்ப நாவலர் இயற்றியுள்ள அருணாசல புராணத்தை பகவான் பலமுறை அடியார்களுக்குப் படித்து விளக்கிக் காட்டும் போதெல்லாம் பக்திப் பெருக்கினால் அவரது கண்கள் குளமாகி, தொண்டையடைக்க மேற்கொண்டு தொடரமுடியாமல் புத்தகத்தைக் கீழே வைத்துவிட்டு மோனமூர்த்தியாக விளங்குவார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
சைவ எல்லப்ப நாவலர் :

ஆன்மிகம் :

ஸ்ரீரமணாச்ரமம் :