வ.உ. சிதம்பரனார்
ஆசிரியர்:
என்.ரமேஷ்
விலை ரூ.10
https://marinabooks.com/detailed/%E0%AE%B5.%E0%AE%89.+%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D?id=1524-6931-5205-0429
{1524-6931-5205-0429 [{புத்தகம் பற்றி அன்றைய திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள ஒட்டப்பிடாரத்தில் வாழ்ந்தவர் உலகநாத பிள்ளை. இவரது மனைவியின் பெயர் பரமாயி அம்மாள். இத்தம்பதியினரின் மூத்த மகனாக 1872ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5ஆம் நாள் பிறந்தவரே வ.உ.சிதம்பரனார். சிதம்பரத்திற்குப் பின் நான்கு சகோதரர்களும், இரு சகோதரிகளும் பிறந்தனர். உலகநாத பிள்ளை மட்டுமின்றி அவரது முன்னோர்களும் வழக்கறிஞர் தொழிலில் ஈடுபட்டு செல்வமும் புகழும் ஈட்டியவர்கள் ஆவர். அக்குடும்பத்தினரை அனைவரும் வக்கீல் குடும்பத்தினர் என்றே அழைத்தும் வந்தனர். செல்வத்தில் திளைத்த அக்குடும்பத்தினர் ஏழைகளுக்கு வாரி வழங்கும் வள்ளலாகவும் திகழ்ந்தனர். சிதம்பரம் பள்ளிக்குச் செல்லும் வயது வந்ததும், அவர் ஒட்டப்பிடாரத்திலுள்ள திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்குப் பாடம் சொல்லிக் கொடுத்தவர் வீரப்பெருமாள் அண்ணாவி என்பவர் ஆவார். திண்ணைப் பள்ளிக்கூடத்தில் சிதம்பரம் தமிழ்க்கல்வியே கற்றார்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866