வைரல் யானை

ஆசிரியர்: மனுஷ்ய புத்திரன்

Category கவிதைகள்
Publication உயிர்மை பதிப்பகம்
FormatPaperback
Pages 198
ISBN978-93-87636-91-0
Weight250 grams
₹230.00 ₹218.50    You Save ₹11
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தங்கள் மேல் திணிக்கப்படும் பிம்பங்களையும் காட்சிகளையும் இறுகப் பற்றிக்கொள்கிறோம். தன் மதிப்பழிதல் மட்டுமல்ல காதல், அன்றாட உறவுகள் அனைத்திலும் பற்றுக்கோடுகள் அழிந்த ஒரு உதிரிப் பண்பாடும் கலாச்சாரத் தனிமையும் நம்மை ஆட்கொள்கிறது. மன அழுத்தத்தைப் போக்க சந்தையில் ஏதேனும் ஒரு பொருளை வாங்க ஒருவன் விரும்புகிறான், ஒரு ரிஷப்ஷனிஸ்ட் இருந்த இடத்திலேயே முதுமை அடைகிறாள், ஒருவன் ஊரில் வற்றிப்போன தன் தாத்தாவின் கிணறை நினைத்து நகர்ப்புறத்தில் உழல்கிறான், ஒரு கண்ணீர் அஞ்சலிப் போஸ்ட்டரில் காணும் ஒரு பெயருக்குப்பின்னே ஒரு கதை விரிகிறது, லிஃப்ட்டில் சந்தித்த ஒருவன், ஒருத்தியை ஒரு நிமிடப் புகழை உணரச்செய்கிறான், கட்அவுட் மனிதர்கள் அரக்கர்களைப்போல எழுந்து நிற்கிறார்கள், ஆன்லைனில் இல்லாதவர்கள் என்ன செய்கிறார்கள் என்ற சந்தேகம் மனிதர்களை ஆட்டிப் படைக்கிறது. இப்படி எத்தனை எத்தனையோ காட்சிகளை இந்தத் தொகுப்பில் உள்ள கவிதைகளில் கண்டடைய முயற்சித்திருக்கிறேன்.
இந்த நூற்றாண்டு முடிவதற்குள், மனிதன் என்ற சொல்லின் அர்த்தமே மாறிவிடக்கூடும் என்பதற்கான சாட்சியமே இக்கவிதைகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
மனுஷ்ய புத்திரன் :

கவிதைகள் :

உயிர்மை பதிப்பகம் :