வேலையற்றவனின் டைரி

ஆசிரியர்: ஜி.ஆர்.சுரேந்தர்நாத்

Category பொது நூல்கள்
Publication தி இந்து
FormatPaper Back
Pages 152
ISBN978-93-87377-02-2
Weight200 grams
₹250.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தனது எண்ணங்களை கணினி தட்டச்சு கொண்டு செதுக்குபவர். அந்தச் செதுக்கலில் வலி இருக்காது. ஆனால்விலா வலிக்கச்செய்யும் நகைச்சுவைவழியும். காதல் கதைகளுக்காகப் பரவலாக அறியப்பட்ட சுரேந்தர்நாத், 'வேலையற்றவனின் டைரி மூலம் பிடித்திருப்பது காமெடி டிராக். அந்த டிராக்' சில சமயம் நம்மை , நம் பால்ய காலத்துக்குக் கூட்டிச் செல்கிறது. சில சமயம், கல்லூரிக் காலங்களுக்குக் கொண்டு செல்கிறது. மளிகை சாமான்கள் வாங்க அம்மா கொடுத்த காசில் மிட்டாய் வாங்க தனியே கமிஷன்’ பிரித்த குறும்புத்தனத்தை ஞாபகப்படுத்துகிறது. கையில் காதல் வரிகள் எழுதப்பட்ட 'கிரீட்டிங் கார்டு'டன் காதலிக்காகக் காத்திருந்த தருணங்களை அசைபோட வைக்கிறது.நாம் கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்த்து, அந்த நாட்கள் மீண்டும் வராதா என்று ஏங்கும் நாஸ்டால்ஜியா' தன்மை எல்லோருக்கும் உண்டு. இந்தப் புத்தகத்தில் இடம்பெற்றிருக்கும் பெரும்பாலான கட்டுரைகள் நாஸ்டால்ஜியா மழையில் நம்மை நனைய வைப்பவை.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜி.ஆர்.சுரேந்தர்நாத் :

பொது நூல்கள் :

தி இந்து :