வேட்டை

ஆசிரியர்: பாலகுமாரன்

Category நாவல்கள்
FormatPaperback
Pages 264
Weight200 grams
₹125.00 $5.5    You Save ₹6
(5% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866சூரியனின் ஒளிக்கிரணங்கள் பூமியைத் தொட்ட நேரத்தில் சந்திரசேகரின் மகளுக்கு முதல் குழந்தை பிறந்தது. அந்தக் காலை வேளையில் குழந்தை அழும் சத்தம் மிக மெல்லியதாய் பல கண்ணாடிக் கதவுகள் தாண்டி சந்திரசேகருக்கு கேட்டது.
சந்திரசேகர் பரபரப்பானார். மனைவியை அழைத்து கேட்கச் சொன்னார். அவள் கதவுக்கு நெருக்கமாக நின்று காது கொடுத்துக் கேட்கும்போது பளிச்சென்று கதவு திறந்தது. வெள்ளை உடை அணிந்த தாதி வெளியே வந்தாள். அவள் தலையில் பச்சை தொப்பியும், கையில் பச்சை ஏப்ரானும் இருந்தன.
"உங்களுக்கு பேத்தி பொறந்திருக்கா ஸார்...பெண் குழந்தை. தாயும் சேயும் சுகம். நார்மல் டெலிவரி. ஒரு மணி நேரம் அவங்க தியேட்டர்லயே இருப்பாங்க. பிறகு மெல்ல கொண்டுவந்து வார்ட்ல விட்ருவோம். நல்ல சேதி சொல்றனே எனக்கு ஒண்ணும் இல்லையா?”
அந்த தாதி கண் சிமிட்டிக் கேட்டாள். "உனக்கு நெளி மோதிரம் வாங்கித் தரேம்மா.” சந்திரசேகர் உள்ளங்கை உயர்த்தி சத்தியப் பிரமாணம் போல அவளுக்குச் சொன்னார்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பாலகுமாரன் :

நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :