வெள்ளை மாளிகையின் விடி வெள்ளிகள்

ஆசிரியர்: அருண் ராதிகா

Category கட்டுரைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 114
ISBN978-93-88697-96-5
Weight150 grams
₹100.00 ₹95.00    You Save ₹5
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சிகாகோவின் கூவக்கரையில் கழிவகற்றவும் சுகாதாரமான இருப்பிடத்தை உருவாக்கவும் மக்களோடு இணைந்து போராடினார் ஒபாமா. ராட்சதத்தனமான அரசு நிர்வாக அமைப்புகளுடன் போராட சட்ட அறிவு அவசியம் என்பதை ஒபாமா புரிந்து கொண்டார்.அதன் காரணமாக 1988இல் ஹார்வர்டுலா ஸ்கூலில் சட்டம் படிக்கச் சென்றார். ஒருபக்கம் கருப்பர் உரிமைகளுக்காக போராட்டத்தை மேற்கொண்டார். இன்னொரு பக்கம் பெரும்பாலான பிரச்சினைகளுக்காக இன வேறுபாடுகளைக் கடந்து சமூகப் பணியாற்ற வேண்டியதன் அவசியத்தை உணர்ந்தார்.
இந்த ஈடுபாடு காரணமாக ஒபாமாவுக்கு நிறைய வெள்ளையர்கள் நண்பராகினர். கௌரவமிக்க ஹார்வாட்லா ரிவ்யூ ஆய்விதழ் குழுவின் தலைவராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டார். ஹார்வர்டில் இருக்கும் போதுதான் மிஷேல் என்பவரைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஒபாமா சட்டப்படிப்பை முடித்த பின்பு திரும்பவும் சிகாகோவுக்கே திரும்பி வந்தார். அவரது அரசியல் ஆர்வம் கரைபுரளத் தொடங்கியது. சிகாகோவின் மேயராக வேண்டும் என்ற எண்ணம் மெல்ல மெல்ல அவருக்குள் தலைதூக்கியது. - 1992இல் பில்கிளிண்டன் அதிபர் தேர்தலில் போட்டியிட்ட போது அவருக்கு ஆதரவாக ஒபாமா அரசியலில் களம் இறங்கினார். 1997 ஜனவரியில் இலினாய் சட்டமன்றம் உள்ள ஸ்பிரிங் பீல்டுக்கு ஒபாமா சென்றபோது ஒரு புதிய அத்தியாயம் ஒபாமாவுக்குள் துவங்கி விட்டது...

உங்கள் கருத்துக்களை பகிர :
அருண் ராதிகா :

கட்டுரைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :