வெள்ளரிப்பெண்
ஆசிரியர்:
கோணங்கி
விலை ரூ.500
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B3%E0%AF%8D%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D?id=1096-8563-3041-8413
{1096-8563-3041-8413 [{புத்தகம் பற்றி விலங்காதல் என்ற எல்லையில் இந்தக் கதைகளின் கலை உருவாகியிருக்கிறது. விலங்கு என்ற எல்லை வகுத்தல் மனித களத்திலிருந்து உருவாவதாகவே கொள்ளமுடியும். அந்த எல்லையைத் தாண்டி இந்தக் கதைகள் பயணிக்கின்றன. விலங்குகளின் புலன்சார் கூர்மையை மனித புலன் உலகத்துக்கு அப்பால் வைக்காமல் கலைக்குள் உள்வாங்கும் படைப்பாக்கம் இந்தக் கதைகளில் சாத்தியமாகி, உயிரினங்களின் உறவும் உயிரற்றவைகளின் உறவும் இணைந்த பிறழ்வின் நேரடி காட்சிகளாக இந்தக் கதைகள் உள்ளன. விலங்காகி விலங்குகளின் மொழியை உற்பத்திசெய்யும் கதைகளாக இவை மாறியுள்ளன. அல்லது விலங்காக உருமாறியுள்ளன. ப்ரான்ஸ் காப்காவின் கிரிகோர் சாம்சா கரப்பான் பூச்சியாக உருமாறிய கதை நிகழ்வுக்குப் பின் உருமாறுதல் எழுத்தில் விலங்கியல் தத்துவப் புனைவுகளுக்கான முன்மாதிரி கட்டமைக்கப்பட்டது. மனிதனாதல் என்பதை விலங்கின் தளத்திலிருந்து எழுதப்படவேண்டியதாக அதன் பின்னான தத்துவங்கள் வலியுறுத்தின. அந்த எழுத்தின் வரிசையைப் பின்பற்றி வந்த கதைகளாக, கோணங்கியின் கதைகளைக் குறிப்பிடலாம்.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866