வெற்றி - விரட்டிப்பிடி !

ஆசிரியர்: குன்றில் குமார்

Category சுயமுன்னேற்றம்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 128
Weight150 grams
₹50.00 ₹42.50    You Save ₹7
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வாழ்க்கையில் வெற்றியைத் தேடி அலையாதவர்கள் யார்?
மகாபாரதம், ராமாயணம் போன்ற பழம்பெரும் காப்பியங்கள் அனைத்துமே வெற்றியை இலக்காகக் கொண்டுதானே அமைந்துள்ளது! மகாத்மா காந்தி எதற்காகப் போராடினார்? இந்திய சுதந்திரம் வேண்டி. அதில் வெற்றியைப் பெற்றே ஆக வேண்டும் என்பதுதானே அவரது முழுநோக்கமாக அமைந்திருந்தது.
இன்றைய ஜனநாயக அமைப்பில் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் எதை நோக்கி இயங்குகின்றன? தேர்தலில் வெற்றிபெற்று ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்ற வேண்டும் என்பது மட்டும்தானே அவர்களது நோக்கம்.மாணவர்கள் எதற்காகக் கல்வி பயில்கிறார்கள்? அறிவு விருத்தி மட்டுமா அவர்களது நோக்கம்? தேர்வில் நல்ல மதிப்பெண்களைப் பெற்று, உயர் கல்வி படித்து, உயரிய நிறுவனத்தில் மதிப்புமிகு பதவியில் அமர்ந்து வாழ்க்கையில் மகத்தான வெற்றியைப் பெற வேண்டும் என்பதுதானே!அந்த வெற்றி சும்மா வந்துவிடுமா என்ன? 'விரட்டிப் பிடி'க்க வேண்டும். அது எப்படி?
இந்தப் புத்தகம் அந்த ரகசியத்தை உங்களுக்குச் சொல்லித் தருகிறது. படித்துப் பயனடையுங்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
குன்றில் குமார் :

சுயமுன்னேற்றம் :

சங்கர் பதிப்பகம் :