வெற்றியாளர்களின் வெற்றிப் படிகள்

ஆசிரியர்: அ.அமல்ராஜ் IPS

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
Formatpapper back
Pages 248
ISBN81-8446-926-8
Weight250 grams
₹200.00 ₹170.00    You Save ₹30
(15% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



புத்தகத்திற்குள் நுழைவதற்கு முன்.
வாழ்க்கையின் அடுத்தடுத்த கணங்களில் என்ன ஒளிந்திருக்கிறது என்பதை யாரும் அறியமுடியாது. ஆனால், வெற்றியின் வாசல் தேடி வந்தவர்கள் நிச்சயம் ஆயிரம் தோல்விகளிடம் விலாசம் கேட்டிருப்பார்கள் என்பதை மட்டும் நாம் அறிந்திருக்கிறோம்.
நம் வெற்றிக்காக நாம் ஏன் காத்திருக்க வேண்டும்? நம் அர்ப்பணிப்பு உண்மையாக இருந்தால் வெற்றி நமக்காகக் காத்திருக்கும்.
சிந்திப்பதை விடாமல் செய்பவர்களுக்கும், செயலை விடாமல் தொடர்பவர்களுக்கும் நிச்சயம் மாபெரும் வெற்றி இருக்கிறது. நிமிர்ந்து நிற்பவனைத்தான் வானம் அருகில் வந்து வாழ்த்திவிட்டுப் போகும்.
வெற்றிக்கும் தோல்விக்கும் உள்ள இடைவெளி தகுதிக் குறைவல்ல. முயற்சி குறைவே என்பதை நான் அறிந்திருக்கிறேன்; அனுபவித்திருக்கிறேன். அதையே, அந்த அனுபவங்களையே இந்தப் புத்தகம் முழுவதும் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
உங்கள் சொல் வெற்றிபெற வேண்டும். உங்கள் செயல் வெற்றிபெற வேண்டும். உங்கள் எண்ணம், உங்கள் முயற்சி வெற்றிபெற வேண்டும். அதற்கான வழிகாட்டுதலே இந்தப் புத்தகம்.
நம் வாழ்வின் திட்டவட்டமான முக்கிய இலக்குகளை முடிவு செய்து கொண்டு, நம்முடைய அனைத்துச் செயல்பாடுகளையும் அதைச் சுற்றித் தீர்க்கமாய் ஒழுங்கமைத்துக் கொள்ளும்போது நாம் விரும்புகிற அனைத்தையும் பெற்றுவிட முடியும் என்கிற எளிய சிந்தனையின் விளைவே இந்நூல்.

முனைவர். அ.அமல்ராஜ் IPS., இந்திய காவல் பணியில் 1996-ஆம் ஆண்டு தேர்ச்சி பெற்றார். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் காவல் கண்காணிப்பாளராகவும், காவல் துறை துணைத் தலைவராகவும், சேலம் மற்றும் கோவையில் காவல் ஆணையாளராகவும் பணியாற்றியுள்ளார். தற்போது திருச்சி மாநகர காவல் ஆணையாளராகப் பணியாற்றி வருகிறார்.
இவரது முந்தைய நூலாகிய "வெற்றிதரும் மேலாண்மைப் பண்புகள்” விற்பனையில் சாதனை படைத்து வருகிறது. தொடர்ந்து இவரின் இந்த இரண்டாவது படைப்பான. "வெற்றியாளர்களின் வெற்றிப் படிகள்” நூலை வெளியிட்டுள்ளோம்..
அதி அற்புதமான வாழ்க்கையை வாழ்வதற்கான வாய்ப்பு ஒரு சிறந்த மனிதருக்குக் கிடைத்தால் அதைத் தான் மட்டுமே வைத்துக் கொள்ளாமல் இந்தச் சமூகத்திற்கும் கொடுத்துவிட வேண்டும் என்று நினைப்பார்கள். அந்த அதீத விருப்பத்தைத்தான் திரு. அ.அமல்ராஜ் IPS அவர்களின் இந்தப் புத்தகம் காட்டுகிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.அமல்ராஜ் IPS :

சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :