வெனிசுவேலாவின் புரட்சிப் பாதை
ஆசிரியர்:
N.தர்மராஜன்
விலை ரூ.75
https://marinabooks.com/detailed/%E0%AE%B5%E0%AF%86%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B5%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D+%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B0%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D+%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AF%88?id=1582-8166-4166-7367
{1582-8166-4166-7367 [{புத்தகம் பற்றி லத்தீன் அமெரிக்க நாடுகளில் ஒரு புதிய எழுச்சி ஏற்பட்டுள்ளது. அது அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு எதிரான எழுச்சியாகும். இந்த எழுச்சியின் ஈட்டி முனையாக வெனிசுவேலா திகழ்கிறதென்றால் அதன் கூர்முனையாக அந்நாட்டின் குடியரசுத் தலைவர் ஹுகோ சாவேஸ் விளங்குகிறார். ஆனால் இதற்கு ஒரு பின்னணி உண்டு.
<br/>கடந்த 20 ஆம் நூற்றாண்டில் ஐரோப்பிய ஏகாதிபத்திய நாடுகளின் காலனி ஆதிக்கத்திலிருந்து சுதந்திர மடைந்த லத்தீன் அமெரிக்க நாடுகளின் நலன்களுக்கு உதவுவதாக உறவு கொண்டாடி அந்நாடுகளில் காலடி எடுத்து வைத்த அமெரிக்கா, தனது வஞ்சகத்தனமான நவீன காலனி ஆதிக்கத்திற்கான தளம் அமைத்துக் கொண்டது. தனது காலடியில் இருக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகள் மீது 19 ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலேயே தனது கழுகுக் கண்களை பதித்த அமெரிக்கா, 20 ஆம் நூற்றாண்டில் கிடைத்த வாய்ப்பை இறுகப் பற்றிக் கொண்டது. இதனைத் தொடர்ந்து, லத்தீன் அமெரிக்க நாடுகளுக்குள் புகுந்த அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகள், அந்நாடுகளின் பொருளாதாரத்தில் ஆதிக்கம் வகிக்க ஆரம்பித்தன. இதில், லத்தீன் அமெரிக்க நாடுகளின் எண்ணெய்வளங்கள் உள்ளிட்ட மூலப்பொருட்களும் செல்வங்களும் கொள்ளையடித்தது போல் அமெரிக்காவுக்கு கொண்டு செல்லப்பட்டன. அந்நாடுகள் அமெரிக்கா உற்பத்தி செய்த பொருட்களுக்கு சந்தையாகவும் ஆக்கப்பட்டன. மேலும், லத்தீன் அமெரிக்காவின் பொருளாதார மற்றும் தொழில்களுக்கான அடிப்படையான கட்டமைப்புகளும் முக்கிய தொழிற்சாலைகளும் வங்கிகளும் அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகளின் பிடிக்குள் சிக்கிக்கொண்டன. சுருக்கமாகச் சொன்னால் லத்தீன் அமெரிக்காவின் பொருளாதாரத்தை அமெரிக்க பன்னாட்டுக் கம்பெனிகள் ஆதிக்கம் செய்து நிர்ணய சக்திகளாக விளங்கின.
<br/>இதற்கு அனுசரணையாக அரசியலில் தனது பிடிமானத்தை வலுப்படுத்திக்கொள்ள, அந்நாடுகளில் தனக்கு தலையாட்டக்கூடிய பிற்போக்கு ராணுவ சர்வாதிகாரிகளே ஆட்சிக்கட்டிலை அலங்கரிக்க ஏற்பாடு செய்து கொண்டது. இதையும் மீறி மக்களின் கொந்தளிப்பில் அவர்களின் ஆதரவுடன் வரக்கூடிய ஜனநாயக, இடதுசாரி அரசுகள் அந்நாடுகளின் பிற்போக்கு ராணுவத் தலைமைகளாலும் சி. ஐ. ஏ-வாலும் ஆட்சிக் கவிழ்ப்பு செய்யப்பட்டன. இந்த முறையில்தான் 1962-ல் டொமினிகன் குடியரசிலும் 1964-ல் பிரேசில் மற்றும் பொலிவியாவிலும் 1966-ல் அர்ஜெண்டைனாவிலும் ஆட்சிக் கவிழ்ப்புகளும் நிகாகவாவில் இடதுசாரி அரசாங்கம் வீழ்த்தப்பட்டதும் நிகழ்ந்தன.
<br/>}]}
-----------------------
www.marinabooks.com
80,000+ தமிழ்ப் புத்தகங்கள் !!!
10,000+ எழுத்தாளர்கள் !!!
1,000+ பதிப்பகங்கள் !!!
Call / SMS / WhatsApp 88834 88866