வெக்கை

ஆசிரியர்: பூமணி

Category நாவல்கள்
Publication காலச்சுவடு பதிப்பகம்
FormatPaperback
Pages 175
ISBN978-93-81969-29-3
Weight300 grams
₹200.00 ₹170.00    You Save ₹30
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சமூக நிலை பற்றிக் கோபமும், மனித நேயமும், கலை வெற்றி கூட்டுவதில் மிகுந்த சிரத்தையும் கொண்டவர் பூமணி,
சுந்தர ராமசாமி
சாதாரணமானதொரு பழி தீர்க்கும் கதையாக முதல் வாசிப்புக்குத் தென்படும் 'வெக்கை' ஒரு இலக்கியப் படைப்பு என்னும் ரீதியில் நுட்பமான பல பரிமாணங்களைக் கொண்டது. ஏற்றத்தாழ்வும் சுரண்டலும் நிரம்பிய ஓர் அமைப்பின் முரண்களைப் பற்றியும் அவற்றைத் தீர்மானிக்கும் சமூகப் பொருளாதாரக் காரணிகளைப்
பற்றியும் ஆராயும் முனைப்புக்கொண்ட ஒரு நாவல் என்று சொல்வது இந்த நாவலைப் பற்றிய ஒரு எளிய புரிதலாகவே இருக்க முடியும். பூமணி எழுப்பும் கேள்விகள் இவற்றைக் காட்டிலும் முக்கியமானவை. ஒரு கலைஞன் என்ற முறையில்
- பூமணி பழியின் அரசியலையும் அறத்தையும் கேள்விக்குள்ளாக்குகிறார். இவ்வுலகின் மீதான, தான் வாழும் நிலத்தின் மீதான ஆச்சரியங்களிலிருந்தும் குழந்தைமையின் பேதமையிலிருந்தும் விடுபட முடியாத ஒரு பதினைந்து வயதுச் சிறுவனின் மனம் பழியின் கொழகொழப்பான திரவத்தால நிரப்பப்படும் பயங்கரம் எளிய, மிருதுவான சொற்களால்
கலைப்படுத்தப்பட்டிருக்கிறது. வெற்றி, தோல்வி பற்றிய புழக்கத்திலிருக்கும் சொற்களைத் தன் தணிந்த குரலால் மறுக்கும்
ஒரு கலைஞன் அவற்றின் விளைவுகளைக் குறித்துத் தன் வாசகனோடு நிகழ்த்தும் மிகத் துக்ககரமான உரையாடல் எனவும் இந்நாவலைச் சொல்லலாம்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பூமணி :

நாவல்கள் :

காலச்சுவடு பதிப்பகம் :