வீரபாண்டிய கட்டபொம்மன்

ஆசிரியர்: ம.பொ.சிவஞானம்

Category வரலாறு
Publication பூம்புகார் பதிப்பகம்
FormatPaper back
Pages 96
Weight100 grams
₹25.00 ₹23.75    You Save ₹1
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



தமிழகம், வீரத்தின் விளைநிலம், இங்கு வாழையடி வாழையாக வீரப் பெருமக்கள் பலர் தொன்றுதொட்டு இன்று வரை தோன்றி வருவது உலகறிந்த உண்மை . அந்த வீரப் பெருமக்கள் வரிசையிலே பாஞ்சாலங்குறிச்சி கட்ட பொம்மனும் ஒருவனாவான்."கட்டபொம்மு” என்பது அவ்வீரனின் குடும்பப் பெயர். வீரபாண்டியன் என்பதே, அவனுடைய பெற்றோரிட்ட இயற்பெயர். எனவே, அப்பெருமகனை 'வீரபாண்டியன்' என்ற பெயராலேயே அழைப்போமாக.வீரபாண்டியன், பிறந்த நாட்டால் தமிழன்; பேசும் மொழியால் தமிழன்; வாழ்க்கை நெறியாலும் தமிழன். என்றாலும், அவனுடைய மூதாதையர் ஆந்திரரேயாவார். வடக்கே பெல்லாரி ஜில்லாவில் பஞ்சம் வாட்டியதன் காரணமாக அங்கிருந்து வெளியேறி, தெற்கே திருநெல்வேலி ஜில்லாவில் சாலிகுளம் என்னும் சிற்றூரில் குடியேறினார் பால்ராஜா எனும் ஆந்திரர். இவர் குடியேறிய காலம், கி.பி. பதினோறாம் நூற்றாண்டு என்பர் வரலாற்று அறிஞர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ம.பொ.சிவஞானம் :

வரலாறு :

பூம்புகார் பதிப்பகம் :