வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப்பாடல்

ஆசிரியர்: நா.வானமாமலை

Category கவிதைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 208
ISBN978-81-907951-8-0
Weight250 grams
₹80.00 ₹76.00    You Save ₹4
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வீரபாண்டிய கட்டபொம்மனைப் பற்றிய கதைப்பாடல்கள் கோவில்பட்டி வட்டாரக் கிராமங்களில் கூத்தாகவும், பாடல்களாகவும் நிகழ்த்தப் படுகின்றன. அந்தக் குழுக்களில் சில குழுக்கள் தமிழ்ப் பாடல்களாகவும், சில குழுக்கள் தமிழ், தெலுங்கு கலந்த பாடல்களாகவும் பாடுகின்றனர். ஆண் கதைமாந்தர்களின் கூற்றுகள் தமிழிலும், பெண் கதைமாந்தர்களின் கூற்றுகள் தெலுங்கிலும் இடம் பெற்றுள்ளன. இக் கதைப்பாடலின் முழுப் பிரதியை ஓணமாகுளம் பெருமாள் என்பவரின் சரிபார்ப்போடு வெளியிடு வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
வீரபாண்டிய கட்டபொம்மு கதைப்பாடலுக்கு நா.வா. எழுதியுள்ள முன்னுரை இத்துறை தொடர்பான ஆய்வுக்கு அடிப்படையாக அமையும். கட்டபொம்மனைப் பற்றிப் பலவிதமான கருத்துகள் இருந்தாலும் பாமர மக்கள் கொண்டாடும் வீரனாக அவன் போற்றப்பட்டான். வெள்ளையரின் ஆதிக்கத்தைத் துணிச்சலோடு எதிர்த்த வீரனாக மக்கள் மனத்தில் இடம்பிடித்தான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா.வானமாமலை :

கவிதைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :