வீரபாண்டியக் கட்டபொம்மன் கதைப்பாடல்

ஆசிரியர்: நா.வானமாமலை

Category கதைகள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 160
ISBN978-81-907951-3-5
Weight250 grams
₹140.00 ₹133.00    You Save ₹7
(5% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



கட்டபொம்மன் கதை தற்போது பிரபலமாகியுள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாகக் கட்டபொம்மனது வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு சரித்திர நூல்களும், நாடகங்களும், ஆராய்ச்சி நூல்களும், பல வெளி வந்திருக்கின்றன. சில மாதங்களுக்கு முன் கட்டபொம்மன் கதையைத் திரையிலும் கண்டோம். அவனுக்கு நினைவுச் சின்னங்கள் நாடு முழுவதிலும் எழுப்பப்படுகின்றன. சிப்பாய்ப் புரட்சியின் நூற்றாண்டு விழாவின்போது காட்டுவதற்கென்று எடுக்கப்பட்ட வரலாற்றுப் படத்தில் கட்டபொம்மன் வரலாறு சேர்க்கப்படாது விட்டதைக் குறித்துக் கண்டனம் எழுந்தது. பின்னர் அக்கதையும் சேர்த்துக் கொள்ளப்பட்டது. வெள்ளையர் ஆட்சி பரவத் தொடங்கிய காலத்தில் அதனை எதிர்த்த வீரர்களுள் கட்டபொம்மன் தலை சிறந்தவனாக இன்று கருதப்படுகிறான்.
கட்டபொம்மன் பேராசைக்காரனென்றும் கொள்ளைக்கார னென்றும் ஒருவர் வர்ணித்திருக்கிறார். அவருக்கும் ஆதாரங் களில்லாமல் போகவில்லை. பூலுத் தேவர்தான் வெள்ளையரை எதிர்த்த முதல் வீரரென்று நிலைநாட்ட அவர் முயன்றிருக்கிறார்.
இவ்வாறு கட்டபொம்மனைத் தேச பக்தனென்று புகழ்பவர்களுக்கும், கொள்ளைக்காரனென்று இகழ்பவர்களுக்கும் ஒரே விதமான மூல ஆதாரங்கள் தாம் இருக்கின்றன. இருவரும் தாங்கள் கூற்றுக்களை நிரூபிப்பதற்குக் நூல்களையே ஆதாரமாகக் கொள்கிறார்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நா.வானமாமலை :

கதைகள் :

கௌரா பதிப்பக குழுமம் :