வீட்டுக்கு ஒரு மருத்துவர்

ஆசிரியர்: அ.உமர்பாரூக்

Category உடல்நலம், மருத்துவம்
Publication எதிர் வெளியீடு
FormatPaperback
Pages 240
ISBN978-93-87333-03-1
Weight300 grams
₹300.00       Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866"தீதும் நன்றும் பிறர்தர வாரா” என்று நம் முன்னோர்கள் சொல்லிச்சென்றுள்ளார்கள். ஆதலால் “வீட்டுக்கு ஒரு மருத்துவர் தேவை” என்று முற்போக்கு எழுத்தாளர் உமர் பாரூக் கருதுவது எவ்வளவு பொருத்தமானது. “மருந்தே உணவு உணவே மருந்து” இதுதானே சுயமரியாதை உள்ள தமிழன் கண்ட வழி. “அண்டத்தில் உள்ளது எல்லாம் பிண்டத்தில் உள்ளது” என்பதுதானே தத்துவம். விசும்பிற்கும் நம் உடலிற்கும் என்ன தொடர்பு? மூடிக்கிடப்பதைத் திறந்து விடுவதே மருத்துவம் என்பதைப் புரியவைக்கிறது “வீட்டுக்கு ஒரு மருத்துவர்” நூல்.
பல நூறு ஆண்டுகளாக சுயமரியாதையை இழந்த தமிழ்ச்சமுதாயம் தனது உடல் கூறும் மொழியைக்கூட மறந்து போனது. அதுபற்றித் தெளிவுபடுத்துகிறது “உடலின் மொழி.” உண்ணும் உணவை வகைப்படுத்துகிறது “உணவோடு உரையாடு.” நோயுற்றவருக்கு சிகிச்சை அளிப்பது பற்றிப் பேசுகிறது “உடல்நலம் உங்கள் கையில்.” “வீட்டுக்கு ஒரு மருத்துவர்” முதல் பதிப்பு வெளியானபோதே நான் இப்படிக் குறிப்பிட்டேன். “வீட்டுக்கு ஒரு மருத்துவர்” என்று இருப்பதை விட “ஒவ்வொருவரும் மருத்துவரே” என்று இருப்பதே மிகப்பொருத்தம் என்று. இன்றும் எனது கருத்தில் மாற்றம் இல்லை...

உங்கள் கருத்துக்களை பகிர :
அ.உமர்பாரூக் :

உடல்நலம், மருத்துவம் :

எதிர் வெளியீடு :