வீடு தேடும் படலம்

ஆசிரியர்: அமரர் கல்கி தமிழில் : 0563

Category வரலாறு
FormatPaper Back
Pages 144
Weight150 grams
₹60.00 ₹57.00    You Save ₹3
(5% OFF)
Only 2 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சத்திரப்பட்டியைச் சுற்றிப் பதினைந்து மைல் விஸ்தீர ணத்துக்கு, விதூஷகன் சின்னு முதலியைப் பற்றி அறியாதவர் யாருமில்லை . சிறுபிள்ளைகள் முதல், கிழவர் கிழவிகள் வரையில் எல்லாருக்கும் அவனைத் தெரியும். எந்த ஊரிலே யார் நாடகம் போட்டாலும் அவனுக்கு அழைப்பு வராமலிராது. சின்னுமுதலி வருகிறான் என்றால் அன்று கூட்டம் இரண்டு மடங்குதான். அவனுடைய அகடவிகட அதிசய சாமர்த்தியங்கள் அந்தத் தாலுகா முழுவதும் பிரசித்தமாயிருந்தன.
கூத்து மேடைக்குச் சின்னுமுதலி வந்துவிட்டானானால் ஒரே குதூகலந்தான். சில சமயம் கோணங்கிக் குல்லா தரித்து, புலி வேஷத்தைப் போல் கோடு போட்ட கால்சட்டையும் மேற் சட்டையும் போட்டுக் கொண்டு வருவான். அவனுடைய நடை, உடை, பாவனை ஒவ்வொன்றும் ஜனங்களுக்குச் சிரிப்பு உண்டாக்கும். அவனுடைய பொய் மீசை நிமிஷத்துக்கொருமுறை மேலும் கீழும் போய் வரும். பேசுவதற்கு அவன் வாயைத் திறந்து விட்டாலோ சொல்ல வேண்டியதில்லை. நாடகக் கொட்டகை கிடுகிடாய்த்துப் போகும். சில சமயம் வெள்ளைக்காரனைப்போல் தொப்பி போட்டுக் கொண்டு வருவான்.

உங்கள் கருத்துக்களை பகிர :
அமரர் கல்கி :

வரலாறு :

கௌரா பதிப்பக குழுமம் :