விஸ்வநாதம் கவிதை நாடகம்

ஆசிரியர்: C.S. முத்துசாமி ஐயர்

Category நாட்டுப்புறவியல்
FormatPaperback
Pages 152
Weight150 grams
₹75.00 $3.25    You Save ₹3
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
‘விசுவநாதம்' என்னும் இந்த நூல் விசுவநாதனது சரித்திரத்தை நாடக ரூபமாய் எடுத்துக்கூறும் தன்மையில் அமைந்துள்ளது. இவன் நமது தமிழ் நாட்டின் ஒரு பகுதியாகிய மதுரையை அரசாட்சி புரிந்த நாயக்க ராஜ வமிசத்தில் முதல் அரசனும் அவர்களில் திலகம் போன்றவனுமான ஓர் இந்து அரசன். இவன் இளமை தொடங்கி நல்லொழுக்கம், சற்சகவாசம், பெருந்தன்மை, ஆழ்ந்த அறிவு, ஆண்மைத்தன்மை, ராஜபக்தி முதலிய நற்குணங்களை உடையவனாய் விளங்கினன். இத்தகைய நற்குணங்களையுடைய இவனது சரிதத்தைத் தற்கால பாஷாபிவிருத்திக்கு ஏற்றபடி நாடக ரூபமாய் எழுதினால், இதைப் படிக்கும் மாணாக்கர்களுக்கும் ஏனையோர்க்கும் அவ்வரிய குணங்களும் ஒழுக்கங்களும் படியுமென்பது கருதியும், என் நண்பர்களின் வேண்டுகோளுக்கிணங்கியும் யான் இந்நூல் எழுதலானேன். இச்சரித்திரத்திலுள்ள சாராமிசங்களையும் கதையின் தொடர்ச்சியையும், என்னால் எழுதப்பட்டுள்ள கதாசங்கிரகமும், நண்பர் ம-ள-ள-ஸ்ரீ இராஜமையங்காரவர்களால் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள முகவுரையுமே நன்கு விளங்குமாதலால், அவற்றைப்பற்றி இவ்விடத்தில் எடுத்துச் சொல்வது மிகையென விடுத்தனன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
நாட்டுப்புறவியல் :

கௌரா பதிப்பக குழுமம் :