விவேக் ரூபலா விஷ்ணு அதிரடி துப்பறியும் நாவல்கள் தொகுதி - 1

ஆசிரியர்: ராஜேஷ்குமார்

Category நாவல்கள்
Publication RK பப்ளிஷிங்
FormatPaperback
Pages 404
ISBN978-81-949075-4-1
Weight250 grams
₹370.00 ₹333.00    You Save ₹37
(10% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866விவேக்
ஆரம்பத்தில் சிஐடி ஆஃபிஸராக பணி புரிந்த விவேக் தன்னுடைய தனிப்பட்ட துப்பறியும் திறன் காரணமாக, அரசின் பரிந்துரையின் பேரில், இப்போது சிபிஐ துரை எனப்படும் ஸ்பெஷல் க்ரைம் டிவிஷன் ஆஃபிஸர். SCD என்பதின் விரிவாக்கம் Special Crime Division என்பதாகும்.
இந்தியா மற்றும் சர்வதேச அளவில் நடைபெறும் சீரியஸ் க்ரைம்ஸ் Serious Crimes எதுவாக இருந்தாலும் சரி, அதை இன்வெஸ்டிகேட் செய்து குற்றவாளிகளை கண்டுபிடிப்பதுதான் ஒரு எஸ்.சி.டி ஆஃபிஸரின் பணி. அதைத்தான் விவேக் இப்போது செய்து கொண்டிருக்கிறார். என்றுமே இளமையாய் இருப்பதால் விவேக்கின் பிறந்த தேதி, வருடம் பற்றி நீங்கள் யாரும் கேட்க அனுமதியில்லை .
ரூபலா
ஹோம் சயின்ஸ் படித்த அதி அழகான ரூபலாவிற்கு காவல் துறையில் சேர்ந்து பணிபுரிய வேண்டும் என்கிற ஆசை. ஆனால் பெற்றோர்களின் சம்மதம் கிடைக்காததால் அந்த ஆசை நிராசையாகிவிட விவேக்கின் திறமையை காதலித்து மிஸஸ் விவேக்காக மாறியவள். விவேக் துப்பறியும் மிகவும் சிக்கலான வழக்குகளை தானும் உள்வாங்கிக் கொண்டு அவ்வப்போது டிப்ஸ் கொடுத்து அணில் போல் உதவிக்கொண்டு இருப்பவள்.
விஷ்ணு
விவேக்கிடம் பணிபுரியும் ஓர் உதவி அதிகாரி. கிட்டத்தட்ட விவேக்கின் நிழல் பேசும் பேச்சில் கொஞ்சம் விளையாட்டுத்தனம் இருந்தாலும், அதில் விஷயம் இருக்கும். மூச்சுத் திணற வைக்கும் சிக்கலான நேரங்களில் ஆக்ஸிஜனாய் இருப்பவன்.


உங்கள் கருத்துக்களை பகிர :
ராஜேஷ்குமார் :

நாவல்கள் :

RK பப்ளிஷிங் :