விழுதில் ஆடிய குரங்குகள்

ஆசிரியர்: கன்னிக்கோவில் இராஜா

Category சிறுவர் நூல்கள்
Publication வாசக சாலை
FormatPaperback
Pages 104
Weight150 grams
₹110.00 ₹104.50    You Save ₹5
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866அத்தனை விலங்கிலும் வாலைக் கண்டே வியக்கும் அழகான கரடிக்குட்டியின் கதையில் அனைத்து விலங்குகளுக்கும் ஒரு அறிமுகப் படலமே நடத்தி இருக்கிறார். அல்லி குளத்து மீன்களின் அழகான விளையாட்டினைச் சொல்லி கடைசியில் அதனால் காட்டிற்கு என்ன பலன் எனக் கச்சிதமாக முடித்திருந்தார்.
தேவை இல்லாச் சண்டையால் பிறருக்கு தீங்கு இழைக்கக் கூடுமென்பதை உணர்ந்து திருந்திய எருமைக் கதையும் அருமை. தன் வேலையைக் கூட ஒழுங்காகச் செய்ய விடாத சமூகம் கண்டு நாய் வருந்தியதும் தன் வழியை அது மாற்றிக்கொண்டு சென்றதும் சிறப்பு. கடைசியாக பிராணிகளை அடைத்துப் பார்க்க விரும்பாத குழந்தை அபியின் புத்தகத்தை மழை நீரில் இருந்து காப்பாற்றிய பூனைக்குட்டியை அவள் வளர்க்கத் தொடங்கியது நல்ல திருப்பம். இப்படி ஒவ்வொரு கதையிலும் ஒரு கரு(வை)த்தை விதைத்துப் போகிறார் இந்நூலாசிரியர் திரு. கன்னிக்கோவில் இராஜா அவர்கள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கன்னிக்கோவில் இராஜா :

சிறுவர் நூல்கள் :

வாசக சாலை :