விலங்குப் பண்ணை

ஆசிரியர்: ஜார்ஜ் ஆர்வெல்

Category அரசியல்
Publication கிழக்கு பதிப்பகம்
FormatPaperback
Pages 144
ISBN978-81-8493-521-9
Weight200 grams
₹85.00 ₹80.75    You Save ₹4
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



(இயற்பெயர் எரிக் ஆர்தர் பிளெய்ர்), 17 ஆகஸ்ட் 1945-ல் வெளியிட்ட நூல் அனிமல் ஃபார்ம் (விலங்குப் பண்ணை). படிப்பவர் அனைவருமே இது யாரைப் பற்றியது, எதைப் பற்றியது என்று சட்டென்று உணர்ந்துகொண்டுவிடுவார்கள். கம்யூனிஸ ரஷ்யா உலகப் பாட்டாளி மக்களுக்கும் ஒடுக்கப்பட்டோருக்கும் ஓர் ஆதர்சமாக இருக்கும் என்று நினைத்துக்கொண்டிருந்தபோது, ஜோசஃப் ஸ்டாலின் உருவாக்கிய போலீஸ் ராஜ்ஜியமும் அவர் இழைத்த படுகொலைகளும் உலகையே உலுக்கின. ஆர்வெல்லின் விலங்குப் பண்ணையில் யார் ஸ்டாலின், யார் லெனின், யார் ட்ராட்ஸ்கி, கம்யூனிஸ்ட் அதிகார வர்க்கம் எப்படி சர்வாதிகாரத்தன்மை கொண்டு இயங்கும் என்பதையெல்லாம் நீங்கள் காணமுடியும். யார் பதவியில் இருந்தாலும் சரி, பாட்டாளிகள் மீண்டும் மீண்டும் வஞ்சிக்கப்படுவார்கள் என்பதுதான் நியதியோ என்ற வருத்தமும் ஏற்படும். எழுதப்பட்டு 66 ஆண்டுகளுக்குப் பின்னர், இன்றும்கூட ஸ்டாலினின் ரஷ்யா பற்றிய அரசியல் வரலாறுபோல இன்றும் புதுமையாகக் காட்சியளிக்கிறது இந்தப் புத்தகம். அதன் சுவை குன்றாது, நேர்த்தியாகத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார் பி.வி.ராமஸ்வாமி. இதுதான் இவரது முதல் மொழியாக்கம் என்பது ஆச்சரியம் அளிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
அரசியல் :

கிழக்கு பதிப்பகம் :