விலங்குகள் பொய் சொல்வதில்லை

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்

Category கதைகள்
Publication தேசாந்திரி பதிப்பகம்
FormatPaper back
Pages 200
ISBN978-93-8748-460-3
Weight250 grams
₹225.00 ₹191.25    You Save ₹33
(15% OFF)
Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



சென்னையில் ஒரு ஏரியை தனியார் நிறுவனம் ஒன்று ஆக்ரமித்து, மூடப்போகிறது என அறிந்து பெரும்போராட்டம் உருவானது. சுற்றுச்சூழல் ஆர்வலர்களுடன் அந்த ஏரிக்குப் போயிருந்தேன். அப்போது ஒரு தவளை என்னையே பார்த்துக் கொண்டிருந்தது. ஒரு வேளை அந்தத் தவளை ஏரியை காக்கப் போராடியிருந்தால் எப்படியிருக்கும் என்ற கற்பனை மனதில் தோன்றியது. அதன் தொடர்ச்சியாகவே இந்த நூலை எழுதினேன்.
இன்று பள்ளி மாணவர்கள் பலருக்கும் செய்தித்தாள் படிக்கிற பழக்கமில்லை. செய்திகளை இணையத்திலோ, தொலைக் காட்சியிலோகூட அறிந்துகொள்ள விரும்புவதில்லை. ஆனால் செய்திகளை அறிந்துகொள்ளாமல் உலகைப் புரிந்துகொள்ள முடியாது. ஆகவே செய்தித்தாள் படிக்கிற விஷயத்தை முதன்மைப்படுத்தி இக்கதையை உருவாக்கியுள்ளேன்.
பள்ளி ஒன்றிற்குச் சென்றிருந்தபோது ஒரு பையன், மரம் சிறகு முளைத்து பறப்பதுபோல படம் வரைந்து என்னிடம் காட்டினான். எதற்காக அந்த மரம் பறக்கிறது எனக்கேட்டேன். அவன் பதில் சொல்லவில்லை. நான் பதில் சொல்லட்டுமா எனக்கேட்டேன். தலையாட்டினான். அவனுக்கு சொன்னக் கதைதான் 'இறக்கை விரிக்கும் மரம்'.
கதையின் ஊடே விதையில்லாமல் பழங்கள் உருவாக்கப்படுவது பற்றியும் மரபணுமாற்றம் செய்த பழங்கள் பற்றியும் சில உண்மைகளைச் சுட்டிக்காட்டியுள்ளேன். இவற்றையும் குழந்தைகள் அறிந்துகொள்ள வேண்டியது அவசியம்.
ரயில் பயணத்தின் போது அருகிலுள்ள ஒரு சிறுவன் என்னிடம் கதை சொல்லும்படி கேட்டான். ஒரு பூனையும் கோழியும் காதலித்து கல்யாணம் செய்துகொண்டன என்ற முதல்வரியை சொன்னவுடன் அவன் சிரித்துவிட்டான். கதை கேட்கும் ஆர்வம் அதிகமாகிவிட்டது. அவனுக்குச் சொன்ன கதையை திருத்தி சரிசெய்து எழுதியதே இச்சிறார் நூல்.


உங்கள் கருத்துக்களை பகிர :
எஸ். ராமகிருஷ்ணன் :

கதைகள் :

தேசாந்திரி பதிப்பகம் :