விரட்டி அடி

ஆசிரியர்: சிபி கே.சாலமன்

Category சுயமுன்னேற்றம்
Publication கிழக்கு பதிப்பகம்
Pages 125
₹60.00 ₹54.00    You Save ₹6
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சாதிப்பதற்கு என்னென்ன வேண்டும்? இதற்கு விடை சொல்வது கடினம். ஆனால் சாதிக்கத் துடிப்பவரிடம் என்னவெல்லாம் இருக்கக்கூடாது என்று சொல்லிவிடமுடியும். மந்தையைவிட்டு எப்போது ஓர் ஆடு விலகிச் செல்கிறதோ அந்த நிமிடத்தில் இருந்து அந்த ஆடு ஆடாக இருப்பதில்லை. தனக்கென்று ஒரு புதிய வழித்தடம். தெளிவான ஒரு லட்சியம். அந்த லட்சியத்தை அடைவதற்கான ஒரு செயல்திட்டம். எல்லாவற்றுக்கும் மேலாக, துணிந்து ஒரு ஆட்டம் ஆடிப்பார்க்கும் துணிச்சல். உச்சத்தைத் தொட்ட சாதனையாளர்களின் அடிப்படை ஃபார்முலா இது. வெட்கம். பயம். கூச்சம். தயக்கம். உங்களுக்குள்ளே பதுங்கியிருக்கும் இந்த நான்கு எதிரிகளையும் ஒழித்துக்கட்டினால் மட்டுமே உங்களுக்கு இந்த வெற்றி சாத்தியம். தமிழ் சினிமா ஹீரோ போல் ஓவர் ஷாட்டில் இதைச் சாதிக்க முடியாது. படிப்படியாகத்தான் முன்னேறியாகவேண்டும். உங்கள் தடுமாற்றங்களை, தயக்கங்களை, அச்சங்களை ஒவ்வொன்றாக வெளிச்சம் போட்டுக் காட்டும் இந்நூல் அவற்றை ஒழிப்பதற்கான வழிமுறைகளையும் எளிமையாகச் சொல்லிக்கொடுக்கிறது. உங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகளை ஒவ்வொன்றாக உடைத்து எறியுங்கள். இழப்பதற்கு எதுவும் இல்லை. ஆனால், பெறுவதற்கோ ஏராளம் உள்ளது. நீங்கள் தயாரா?

உங்கள் கருத்துக்களை பகிர :
சிபி கே.சாலமன் :

சுயமுன்னேற்றம் :

கிழக்கு பதிப்பகம் :