வியர்வைக்கு வெகுமதி
₹175.00 ₹169.75 (3% OFF)

வியர்வைக்கு வெகுமதி

ஆசிரியர்: வெ.இறையன்பு

Category கதைகள்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 200
ISBN978-81-8446-888-1
Weight250 grams
₹150.00 ₹145.50    You Save ₹4
(3% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866வியர்வை சிந்தி உழைத்தவனுக்கு கூலி கொடுக்கலாம். வெகுமதி கொடுக்கலாமா? கொடுக்க முடியுமா? நீ கூலி கொடு, கொடுக்காமல் போ. ஆனால் வியர்வைக்கு நிறைய வெகுமதி உண்டு என 'வியர்வைக்கு வெகுமதி' என்று வித்தியாசமான தலைப்பிட்ட இந்த நூலின் முதல் அத்தியாயத்திலேயே பட்டியலிடுகிறார் பாருங்கள் நூலாசிரியர்.
'வியர்வை சிந்தி உழைத்தவனுக்கு வியாதிகள் வருவதில்லை, உறங்குவதற்கு மாத்திரைகள் தேவையில்லை, அவன் கைகளே தலைக்கு தலையணையாகிறது. வீசுகிற தென்றலே விசிறியாகிறது. உடல் உறுப்புகள் அழகாகின்றன. எழுதுபவர்களுக்கு விரல்களும், கல்லுடைப்பவர்களுக்குக் கைகளும், களையெடுப்பவர்களுக்கு கால்களும், மூட்டை தூக்குபவர்களுக்கு முதுகும் அழகின் இலக்கணமாய் அணிவகுக்கின்றன. உழைக்காத உடம்பு ஊளைச்சதைகளால் ஊதி விடுகின்றது!'
இங்கேதான் நிற்கிறார் வெ. இறையன்பு அவர்கள். இந்நூலில் உள்ள மொத்த 30 அத்தியாயங்களும் வியர்வைக்கு விழா எடுத்த நிறைவை உண் டாக்கி விடுகிறது. எத்தனை குட்டிக் கதைகள், எத்தனை நிஜக்கதைகள், உலக இலக்கியங்களிலிருந்து எத்தனையெத்தனை மேற்கோள்கள், எத்தனை அனுபவங்கள் என வியக்க வைக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வெ.இறையன்பு :

கதைகள் :

விஜயா பதிப்பகம் :