வித்தைக்காரச் சிறுமி

ஆசிரியர்: விஷ்ணுபுரம் சரவணன்

Category சிறுவர் நூல்கள்
Publication வானம் பதிப்பகம்
FormatPaperback
Pages 56
First EditionMar 2017
Weight100 grams
Dimensions (H) 16 x (W) 17 x (D) 1 cms
₹40.00       Delivery in 4-7 Days

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here"உலகத்திலேயே பெரிய கால்கள் யாருக்கு இருக்கின்றன தெரியுமா?” யோசிக்கவே வேண்டாம். கதைகளுக்குத்தான் பெரிய கால்கள். பெரிய கால்கள் சாதாரணவை அல்ல மந்திரக் கால்கள். குழந்தைகளுக்கு கதைகள் சொல்கிறோம். குழந்தைகள் உறங்கியதும் அவர்களின் கனவுக்குள் சென்றுவிடுகிறது அந்தக் கதை. கனவுக்குள் செல்லும் கால்கள் மந்திரக் கால்கள்தானே...
மந்திரக் கால்கள் மட்டுமல்ல... நினைத்தால் இறகுகளாக மாறிவிடுகின்ற கால்கள்.
அழகான கதையை ஒருவர் கேட்டுவிட்டால், அந்தக் கதை அவரிடம் மட்டும் இருப்பதில்லை. அவர்களின் நாக்கின் வழியே பறந்து மற்றவர்களிடம் சென்றுவிடுகிறது. பறக்கும் கால்கள் மட்டுமல்ல... வளரும் கால்களும் கூட... ஆமாம். ஒருவர் தான் கேட்ட கதையை இன்னொருவருக்கு கொஞ்சம் மாற்றிச் சொல்கிறார். அப்போது கதையின் உருவம் கொஞ்சம் மாறுகிறது.


உங்கள் கருத்துக்களை பகிர :
விஷ்ணுபுரம் சரவணன் :

சிறுவர் நூல்கள் :

வானம் பதிப்பகம் :