விதி சமைப்பவர்கள்

ஆசிரியர்: ஜெயமோகன்

Category உரைநடை நாடகம்
Publication கயல் கவின் பதிப்பகம்
FormatPaperback
Pages 216
Weight250 grams
₹190.00 ₹180.50    You Save ₹9
(5% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here'இணையத்தில் தனிப்பட்ட கடிதங்களுக்கு நான் பதிலளிப்பது பற்றி நிறைய கருத்துக்கள் வந்துள்ளன, அவ்வாறு எழுத்தாளன் எதிர்வினையாற்றத்தான் , வேண்டுமா என்கிறார்கள். எல்லா எழுத்தாளர்களும் '| எதிர்வினையாற்றுவதில்லை; அது எழுத்தாளனின் இயல்பு. என் நோக்கில் ஜெயகாந்தனும் சுந்தர ராம) 'சாமியும் எனக்கு முன்னோடிகள்; அவர்கள் எதிர் , வினையாற்றியவர்கள். இந்த எதிர்வினைகள் என்னைத் தொடர்ந்து என் வாசகர்களுடன் நேரடியான தொடர்பில் வைத்திருக்கின்றன. விதவிதமான வாழ்க்கையனுபவங்கள் வழியாக ஒவ்வொரு நாளும் பயணம் செய்ய , வைக்கின்றன. ஒவ்வொரு நாளும் மானுடவாழ்க்கை என்ற மாபெரும் , நாடகத்தின் பார்வையாளனாக அமர்த்துகின்றன. எழுத்தாளனாக இது எனக்குப் பெரிய சொத்து. நான் வாழ்க்கையிலிருந்து அறிந்த சில, எனக்குச் சொல்வதற்காக இருக் கின்றன. அவற்றையே நான் நாவலாக எழுதுகிறேன்; சிறுகதைகளாக்கு கிறேன்; கட்டுரைகளும் உரைகளுமாக வெளிப்படுத்துகிறேன். இந்த உரை 'யாடல்கள் எல்லாமே கட்டுரைகளும் கூடத்தான். இவை வழியாக இன்றைய தமிழ்ச்சமூகத்தின் பிரச்சினைகள் மற்றும் மனநிலைகளின் ஒரு குறுக்குவெட்டுத் தோற்றம் கிடைக்கலாம். இவற்றை நான் எதிர் கொள்ளும் விதம் வழியாக நான் வாழ்க்கை பற்றிக் கொண்டி ருக்கும் நோக்கு வெளிப்படலாம். நான், வாழ்க்கை ஒரு மாபெரும் கொடை என்ற உணர்வை என் இளமையில் அடைந்தேன். அதைத்தான் இன்றுவரை எல்லாக் கதைகளிலும், கட்டுரைகளிலும் சொல்லிக்கொண்டிருக்கிறேன். இந்த நூலில் எல்லாக் கட்டுரைகளும் அதைத்தான் சொல்கின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஜெயமோகன் :

உரைநடை நாடகம் :

கயல் கவின் பதிப்பகம் :