விடுதலைப் போரில் தமிழகம் 1-3

ஆசிரியர்: ம.பொ.சிவஞானம்

Category வரலாறு
Publication வர்த்தமானன் பதிப்பகம்
Pages 1250
Weight1.28 kgs
₹800.00 ₹720.00    You Save ₹80
(10% OFF)
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866இந்தியாவின் நீண்ட கால வரலாற்றை ஆராய்ந்தால் அன்னிய நாட்டினரால் ஏற்பட்ட ஆக்கிரமிப்புகள், தமிழகத்தை விட்டுவிட்டு எஞ்சிய இந்தியாவை மட்டும் அடிமைப்படுத்தியதென்றோ, எஞ்சிய இந்தியா விட்டுவிட்டு தமிழகத்தை மட்டும் அடிமைப்படுத்தியதென்றோ சொல்வதற்கில்லை. கி.பி. பத்தாம் நூற்றாண்டில் ஏற்பட்ட மொகலாய ஆக்கிரமிப்பும் சரி; பதினெட்டாம் நூற்றாண்டில் ஏற்பட்ட பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆக்கிரமிப்பும் சரி; வட இமயம் தொடங்கி தென் குமரி வரையுள்ள இந்தியா முழுவதையும்தான் அடிமைப்படுத்தியதனை வரலாறு காட்டுகிறது. ஆகவே, தமிழன் தனது விடுதலைக்காகப் போராடியதனைச் தேச பக்தியோடு அணுகி அனைத்திந்தியக் கண்ணோட்டத்துடன் ஆராயவேண்டியது அவசியமாகிறது. அப்படித்தான் நானும் ஆராய்ந்து இந்நூலைப் படைத்திருக்கின்றேன். 'விடுதலைப் போரில் தமிழகம்' என்னும் பெயரைப் பெற்றிருப்பினும், இந்திய விடுதலைப் போர் சம்பந்தப்பட்ட அனைத்திந்திய நிகழ்ச்சிகள் எல்லாம் இதிலே தரப்பட்டுள்ளன. இதனைப் படித்து முடிந்தால், இந்திய விடுதலைப் போர் வரலாறு முழுவதையும் படித்தது போன்ற மனநிறைவு ஏற்படும். இது இந்த நூலுக்குள்ள தனிச் சிறப்பு என்றும் சொல்வேன்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ம.பொ.சிவஞானம் :

வரலாறு :

வர்த்தமானன் பதிப்பகம் :