விடியலைத் தேடும் மான்சி

ஆசிரியர்: ஸ்ருதி வினோ

Category குடும்ப நாவல்கள்
Publication விசா பப்ளிகேசன்ஸ்
FormatPaperback
Pages 360
First EditionOct 2014
1st EditionOct 2014
Weight300 grams
Dimensions (H) 19 x (W) 13 x (D) 2 cms
₹170.00 $7.5    You Save ₹8
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
தாய் மடி தேடும் கன்றுகளின் குரல் கேட்டு பதில் குரல் கொடுக்கும் பசுக்களின் அழைப்பு, குஞ்சுகளுக்கு இரைத் தேடிச் செல்லும் பறவைக் கூட்டம், முதிர்ந்த மரங்கள் பூக்களை உதிர்த்து விட்டு பிஞ்சுகளை உருவாக்கிக் கொண்டிருக்க, அதிகாலையில் பார்க்கும் அத்தனையிலும் தாய்மையின் சாயல். தாய்மை தான் உலகின் ஆதாரம் எனக் கூறும் காலைப் பொழுது ஆனால் கீழ் வானம் மட்டும் சிவப்பா வெளுப்பா என்று புரியாத படி காதலனைத் தேர்ந்தெடுக்கத் தவிக்கும் கன்னிப் பெண்ணின் இதயத்தைப் போல் கலங்கித் தெரிய, அந்த கலங்கித் தெரிந்த வானம் எதைச் சொல்ல வருகிறது என்று புரியாமல் சூரியன் ஒருபுறம் சோம்பலாக எழுந்து கொண்டிருந்தான்.
1988ஆம் வருடம் ஜூலை எட்டாம் தேதி காலை ஏழு மணி, பெங்களூரில் இருந்து நாகர்கோயில் வரை செல்லும் தீவு எக்ஸ்பிரஸ் பாலக்காடு கடந்து சென்று கொண்டிருந்தது. ஓடும் ரயிலின் வேகத்திற்கு ஏற்ப மரங்களும் செடிகளும் பின்னோக்கி ஓடிக்கொண்டிருந்தன. ரயிலின் இரண்டாம் வகுப்புப் பயணிகள் பயணித்த அந்தப் பெட்டிகளில் படுத் திருந்தவர்கள் அனைவரும் விடிந்து விட்டதை உணர்ந்து எழுந்து படுத்திருந்த படுக்கையின் கொக்கிகளை கழட்டி விட்டு கீழ் சீட்டில் அமர்ந்து கொண்டனர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஸ்ருதி வினோ :

குடும்ப நாவல்கள் :

விசா பப்ளிகேசன்ஸ் :