விஞ்ஞான உண்மைகள்-3

ஆசிரியர்: என்.ரமேஷ்

Category பொது நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹12.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



பிறந்த குழந்தை உடனடியாக அழ வேண்டுமா? ஏன்?

குழந்தை கருப்பையில் இருக்கும்வரை இளம் சூடான, பாதுகாப்பான சூழ்நிலையில் இருக்கும். அது பிறந்தவுடன் சூழ்நிலையில் பெரிய மாற்றம் ஏற்படுகிறது. வெளிப்புறத்திலுள்ள வெப்பநிலை குழந்தையின் தோலில் பட்டவுடன், தோல் தூண்டப்பட்டு குழந்தை ஆழ்ந்து சுவாசிக்கிறது. முதன் முதலில் சுவாசிக்கும்போது நுரையீரலினுள் புகும் காற்று, குழந்தையைத் தேம்பச் செய்து (gasp) அழுகையை உண்டாக்குகிறது. குழந்தை பிறந்தவுடன் அது வீறிட்டு அழ வேண்டும். அதுவே குழந்தையின் சுவாசம் சீராக இருப்பதற்கான அறிகுறியாகும். குழந்தை பிறந்தவுடன் அதன் அழுகைக் குரல் வேறுபட்டிருந்தால் சுவாச உறுப்பு, மூளை போன்ற உறுப்புகளில் ஏதேனும் கோளாறு இருக்கலாம் என்பது மருத்துவர்களின் கருத்தாகும். குறைப் பிரசவத்தில் பிறந்த குழந்தையின் அழுகையும் மற்ற குழந்தைகளிடமிருந்து வேறுபட்டிருக்கும்.

உங்கள் கருத்துக்களை பகிர :
என்.ரமேஷ் :

பொது நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :