விஞ்ஞான உண்மைகள்-1

ஆசிரியர்: என்.ரமேஷ்

Category பொது நூல்கள்
Publication சங்கர் பதிப்பகம்
FormatPaperback
Pages 32
Weight50 grams
₹12.00      
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



சர்க்கரை நோயாளிகளுக்கு ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கக் காரணம் என்ன?
இன்சுலின் குறைபாட்டின் காரணமாகவே ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரிக்கிறது என்பதை எல்லோரும் அறிவோம். ஒருவரின் உடலில் இன்சுலின் குறையும் போதோ, அல்லது இன்சுலினை உடல் ஏற்காத போதோ சர்க்கரை நோய் உண்டாகிறது.
இன்சுலின் குறைபாட்டால், நமது உணவிலுள்ள குளுக்கோஸ் கிளைக்கோஜனாக மாற்றப்பட்டு, தசைகளில் சேமிக்கப்படுவது தடுக்கப்படுகிறது. எனவே குளுக்கோஸ் நேராக ரத்தத்தில் சேர்கிறது. அடி போஸ் தசைகளில் சேமிக்கப்பட வேண்டிய கொழுப்பு அதிக அளவு சிதைக்கப்பட்டு, அவை குளுக்கோஸாக மாற்றப்பட்டு ரத்தத்தில் கலக்கிறது.மேலும், அமினோ அமிலங்கள் சிதைவுற்று, நீர் மற்றும் கார்பன்டை ஆக்ஸைடாக மாறுவதும் தடுக்கப்படுகிறது. இறுதியாக, கல்லீரலில் கார்போஹைட்ரேட் அல்லாத குளுக்கோ நியோஜெனிஸிஸ் என்னும் குளுக்கோஸ் உற்பத்தி சீர்குலைக்கப்படுகிறது. இதன் காரணமாகவே ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்கிறது.

உங்கள் கருத்துக்களை பகிர :
என்.ரமேஷ் :

பொது நூல்கள் :

சங்கர் பதிப்பகம் :