வாழ நினைத்தால் வாழலாம்

ஆசிரியர்: சுப்புராமன்.சு

Category சுயமுன்னேற்றம்
Publication விஜயா பதிப்பகம்
FormatPaperback
Pages 96
ISBN978-81-8446-243-3
Weight100 grams
₹40.00       Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



வாசிப்பவர் ஆன்மீகவாதியாக இருந்தால் அவருக்கு ஒரு பக்திக்கதை, படிப்பவர் பகுத்தறிவுவாதியாக இருந்தால் அவர் விரும்பும் சிந்தனைக்கதை, இரண்டிற்கும் இடையில் மெல்லிய பாலமாய் நகைச்சுவைக்கதை எனப் பல்வகைக் கதைகளைப் பட்டு இழைகளாய் மாற்றி இழைத்திருக்கும் நூலாடையே கற்பவருக்கு, இந்நூலாசிரியர் வழங்கி இருக்கும் சிந்தனைப் பொன்னாடை.திரு. சுப்புராமன் அவர்கள் தமிழில் புலவர் பட்டம் பெற்றதோடு ஆசிரியப் பணியையும் அறப்பணியாகச் செய்து தம் வாழ்நாளை அதற்கே அர்ப்பணித்து வருகிறார். அவர் நூல்களில் தான் கற்றதை, வாழ்க்கை அனுபவத்தில் பெற்றதை வாரி வழங்கும்) மாரியாகக் கற்போருக்கு இந்நூலைப் படைத்துத் தந்துள்ளார்.வாழ நினைத்தால் வாழலாம் வழியா இல்லை பூமியில்' எனும் கவியரசு கண்ணதாசனின் பாடல்வரியோடு தொடங்கும் இந்நூலினைக் கற்போர் மகிழ்வோடும், சிந்தனை வளத் தோடும் வாழலாம், எனும் வாழ்த்துக்களோடு தொடரட்டும் இவரின் தமிழ்ப்பணி .

உங்கள் கருத்துக்களை பகிர :
சுயமுன்னேற்றம் :

விஜயா பதிப்பகம் :