வாழ்வு தரும் மரங்கள்

ஆசிரியர்: ஆர்.எஸ்.நாராயணன்

Category விவசாயம்
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaperback
Pages 272
First EditionJan 2009
4th EditionMar 2015
Weight300 grams
Dimensions (H) 22 x (W) 14 x (D) 2 cms
₹210.00 ₹189.00    You Save ₹21
(10% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here“வாழ்வு தரும் மரங்கள்” என்னும் இந்நூலில் அரசமரம், ஆலமரம், நாவல் மரம், பலா மரம், வேம்பு, நெல்லி, பனை, கொய்யா, மூங்கில் உள்ளிட்ட 78 வகையான மரங்களின் பயன்பாடுகளை ஆய்வு செய்து, மருத்துவ ரீதியாக விளக்குகிறார். குடல்புண், மூலப்புண், மேகப்புண், வாய்ப்புண் போன்ற புண்களை ஆறச் செய்வதற்கு என்ன செய்யவேண்டும், விந்து விருத்தி செய்ய, பாலுணர்வு தூண்டப்பட, பாலியல் நோய்களைக் குணப்படுத்த, மலட்டுத்தனம் நீங்க, பிரசவம் எளிதாக அமைய, தாய்ப்பால் தாராளமாகச் சுரக்க எதை எதை என்னென்ன பக்குவத்தில் உட்கொள்ள வேண்டும் என்பவற்றை எடுத்துரைக்கிறார். மாதவிடாய் வயிற்று வலிக்கு நிவாரணம் பெற, கர்ப்பம் கலையாதிருக்க, சிறுநீரகத்தில் கல்லடைப்பைப் போக்க, கட்டிகள் உடைய மரங்கள் பயன்படுவதை விளக்குகிறார்.
சர்க்கரை நோய், மஞ்சள் காமாலை, ஈரல் இருதய நோய்களைக் குணப்படுத்த, தசைப்பிடிப்பு, இடுப்புவலி, தலைவலி, பல்வலி, வாதம், பித்தம், கபம், இருமல் போன்ற நோய்கள் தீர மரங்கள் பயன்படும் முறை விளக்கப்படுகிறது. குழந்தைகள், கால்நடைகளின் நோய்களைக் குணப்படுத்த, ஆயுள் விருத்தி பெற, உடல் அழகு பெற, கண்ணொளி, காதொலி இழக்காமல் இருக்க உட்கொள்ள வேண்டியவை எவை என்பது எடுத்துக்காட்டப்படுகிறது. எலுமிச்சம் பழச்சாறை உடலில் தேய்த்துக்கொண்டால் கொசுக்கள் கடிக்காது என்றும், மருதாணிக்குப் புண் ஆற்றும் தன்மை உள்ளது என்றும், கடல் கொந்தளிப்பு, சுனாமி மூலம் நில அரிப்பைத் தடுக்க அலையாத்தி மரங்களை வளர்க்கலாம் என்று மரங்களின் மருத்துவத் தன்மைகளும் விவரிக்கப்படுகின்றன.

உங்கள் கருத்துக்களை பகிர :
ஆர்.எஸ்.நாராயணன் :

விவசாயம் :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :