வாழும் வள்ளுவம்

ஆசிரியர்: வ.செ.குழந்தைசாமி

Category கட்டுரைகள்
Publication பாரதி பதிப்பகம்
FormatPaperback
Pages 100
Weight150 grams
₹60.00       Only 5 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866திருக்குறள் ஒரு வாழ்வியல் நூல் ; தமிழில் தோன்றிய ஒரு பொது மறை ; காலங் கடந்தும் எல்லை கடந்தும் படிக்கப்பெறும் நூல் ; ஆய்வு செய்யப் பெறும் ஒரு சிறந்த நூல். தமிழிலக்கியத் துறையினரோடு மட்டுமின்றி அண்மைக் காலமாகத் திருக்குறளைப் பல்வேறு துறை அறிஞர்களும் கற்று ஆய்வு செய்யும் சூழல் உருவாகியுள்ளது. இது வரவேற்கத்தக்கது. திருக்குறள் தமிழிலக்கிய எல்லையையும் சமய எல்லைகளையும் கடந்த நிலையில் ஆராயப்படுவதே, திருக்குறளுக்குப் பெருமை சேர்க்கும். அப்படிப்பட்ட ஒரு யுகம் அண்மையில் தோன்றி வளர்ந்து வருகிறது.
அறிவியலறிஞர் விஞ்ஞானி டாக்டர் வா.செ.குழந்தைசாமி அவர்கள் ஒரு சிறந்த அறிஞர். எத்துறையிலும் புதியன படைக்கும் முனைவர் ; உண்மைகளைத் தேடும் ஆய்வாளர் ; சிறந்த கவிஞர் ; படைப்புத்தன்மை மிக்க எழுத்தாளர். இவர்தம் சிந்தனையும் எழுத்தும் தமிழினத்தின் வளர்ச்சிக்குக் கருவியாக அமைந்து வருகின்றது.
டாக்டர்வா.செ. குழந்தைசாமி அவர்கள் எழுதிய “வாழும் வள்ளுவம்” என்ற ஆய்வு நூல் அற்புதமாக அமைந்துள்ளது. ஆம்! வள்ளுவம் வாழ்கிறது நூல்களில் அன்று ; மக்கள் மத்தியில் திருக்குறள் வாழ்கிறது; தமிழக வரலாற்றை ஏதோ ஒரு துறையில் இயக்கிக் கொண்டே இருக்கிறது! ஆதலால், ஆசிரியர் தந்த நூல் “வாழும் வள்ளுவம்” என்று பெயர் பெற்றுள்ளது.

உங்கள் கருத்துக்களை பகிர :
வ.செ.குழந்தைசாமி :

கட்டுரைகள் :

பாரதி பதிப்பகம் :