வழி வழி வள்ளுவர்

ஆசிரியர்: ரா.பி.சேதுப்பிள்ளை

Category ஆய்வு நூல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 96
First EditionJan 2009
4th EditionJan 2014
Weight100 grams
Dimensions (H) 18 x (W) 1 x (D) 13 cms
₹35.00 ₹33.25    You Save ₹1
(5% OFF)

தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866தமிழ்நாட்டின் பண்பாட்டை உருப்படுத்திய இலக்கியங்களுள் தலைமை சான்றது திருக்குறள். முப்பாலாக விளங்கும் அந்நூலை எப்பாலவரும் ஏற்றுப் போற்றுவர். தொன்று தொட்டு அதன் சொல்லையும் பொருளையும், தமிழ்ப் புலமை யுலகம் பொன்னே போற் போற்றி வருகின்றது. சிலப்பதிகாரம், மணி மேகலை, சிந்தாமணி, கம்பராமாயணம் ஆகிய நாற்பெருங் காப்பியங்களும், 'பாட்டுக்கொரு புலவன்' என்று பாராட்டப் பெறுகின்ற பாரதியார் இயற்றிய கவிதைகளும் திருக்குறளால் வளம் பெறும் முறையினைக் காட்டுதலே, 'வழி வழி வள்ளுவர்' என்னும் இந் நூலின் நோக்கமாகும். இவற்றுள் 'கம்பராமாயணத்திலே வள்ளுவர்' என்ற கட்டுரை சென்னை வானொலியில் யான் நிகழ்த்திய சொற்பொழிவின் சுருக்கம். “பாரதியார் கவிதையிலே வள்ளுவர்' என்பது டாக்டர் R.K. சண்முகம் செட்டியாருடைய அறுபதாம் ஆண்டு நினைவு மலரில் யான் எழுதிய கட்டுரையின் பெருக்கம். இவற்றை நூலாக வெளியிடுவதற்கு அன்புகூர்ந்து பெருக்கம். இவற்றை நூலாக வெளியிடுவதற்கு அன்புகூர்ந்து இசைவு தந்த சென்னைப் பல்கலைக் கழத்தாருக்கும், ஒப்பு நோக்கி உதவிய அன்பர் திரு. M.A. துரையரங்கனார் அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றி உரியதாகும்.

ரா.பி.சேதுப்பிள்ளை

உங்கள் கருத்துக்களை பகிர :
ரா.பி.சேதுப்பிள்ளை :

ஆய்வு நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :