வள்ளுவரும் குறளும்!

ஆசிரியர்: கி.ஆ.பெ.விசுவநாதம்

Category ஆய்வு நூல்கள்
Publication கௌரா பதிப்பக குழுமம்
FormatPaperback
Pages 88
Weight100 grams
₹35.00 ₹33.25    You Save ₹1
(5% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866



திருக்குறள் உலக நூல்களில் உயர்ந்த நூல்; தமிழர்களுக்கு தெவிட்டாத அறிவு விருந்து. எத்தனையோ நூற்றாண்டுகள் கழிந்த பிறகும் எவ்வளவோ அரசியல், சமய, சமுதாய மாறுதல்கள் ஏற்பட்டு மாறிய பிறகும், திருவள்ளுவரின் நூல் இன்று நம்முடன் வாழ்ந்து நமக்காக அறிவுரை கூறும் சான்றோர் ஒருவரின் தெளிந்த வாய்மொழி போல் விளங்குகிறது.
இவ்வளவு உயர்ந்த நூலைப் பற்றி ஒரு சொற்பொழிவு நடைபெறுகிறது என்றால், அது பலருடைய உள்ளத்தையும் கவர்தல் இயற்கை. சொற்பொழிவு ஆற்றுகின்றவர் தேர்ந்த பேச்சாளர் என்றால், இச்சிறப்புப் பல மடங்கு ஆவதும் இயற்கையே.
திருவாளர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் எதையும் சுவைபடப் பேசுவதில் வல்லவர். நுண்ணிய கருத்துக்களுக்கும் அழகிய வடிவம் தந்து, வினாவிடை புகுத்திக் கேட்போருக்கு வேட்கையை வளர்த்து விருந்து நல்குவது அவர்தம் பேச்சு.
சொற்பொழிவாளர், திருவள்ளுவரைப் பற்றிய கதைக் குப்பைகளை எல்லாம் கட்டுக்கதை என ஒதுக்கியது மகிழத்தக்கது. திருவள்ளுவர் கூறும் உவமைகளை எல்லாம், அரிய சிறுகதைகளாகக் கூறி விளக்கி உவமைத் திறனைப் பாராட்டியுள்ளார் ஆசிரியர்.

உங்கள் கருத்துக்களை பகிர :
கி.ஆ.பெ.விசுவநாதம் :

ஆய்வு நூல்கள் :

கௌரா பதிப்பக குழுமம் :