வளர்ச்சி விதைகள்

ஆசிரியர்: பரமன் பச்சைமுத்து

Category மாத இதழ்கள்
Publication மலர்ச்சி
FormatPaperback
Pages 144
Weight150 grams
₹160.00 ₹155.20    You Save ₹4
(3% OFF)
Only 3 copies left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866
புத்தகத்தின் மேம்பட்ட உள்பக்கம் பார்க்க Click Here



வளர்ச்சிவிதைகள் இன்று வாழ்க்கை என்பது வேறு மாதிரி தெரிகிறது. வெறும் ஆசானாகத் தெரியவில்லை . இன்னும் பெரிதாகத் தெரிகிறது. வேறு வேறு மனிதர்கள், மரங்கள், பறவைகள், பூச்சிகள், உயிரினங்கள், உயிரற்றவைகள் என எதையாவது தொடர்ந்து என் வாழ்வின் பாதையில் வைத்து தனது கற்பித்தலைத் தரும் கண்ணுக்கும் தெரியாத பரந்து விரிந்த ஒரு பல்கலைக்கழகம் அது. பறக்கும் காக்கை, பராக்கு பார்க்கும் பையன், மாரியப்பன் தங்கவேலு, 'மாய நதி பாடல், சீறி விழும் நதி, சிரிக்கும் குழந்தை, வர்தா புயல், வராதக் கடன் என எல்லாவற்றிலிருந்தும் எதையாவது கற்றுக் கொடுத்துக் கொண்டேதான் இருக்கிறது வாழ்க்கை. 'எப்போதும் எதையாவது நிகழ்த்தி கற்றுக் கொடுத்துக் கொண்டேயிருக்கும் வாழ்க்கையின் முன்னால் எப்போதும் கற்றுக் கொள்ளும் மாணவனாக நான் இருக்கிறேனா என்ற கேள்விக்கு என்னிடம் உறுதியான பதில் இல்லை. வாழ்க்கை என் வழிப் பாதையில் நிகழ்த்தி விட்டுப் போகும் சில சங்கதிகளில் கிடைக்கப் பெறும் அனுபவங்களை அந்நேரங்களில் என்னுள்ளே தோன்றிய உணர்வுகளை ஒரு மாணவனாகப் பதிவு செய்து வளர்ச்சி விதைகளாக வைத்துக் கொள்வதும், பிறகு அதை மலர்ச்சி மாணவக் குடும்பத்திடம் பகிர்வதன் மூலம் அவர்களுக்குள் விதைப்பதும் என் வழக்கம். இரண்டு ஆண்டுகளாக மலர்ச்சி மாணவர்களுக்காக பதிவு செய்து பகிர்ந்து கொண்ட அந்த விதைகள், இதோ ஒரே நூலாக - 'வளர்ச்சி விதைகள்.

உங்கள் கருத்துக்களை பகிர :
பரமன் பச்சைமுத்து :

மாத இதழ்கள் :

மலர்ச்சி :