வளர்க உயர்க

ஆசிரியர்: பேரா.ச.வின்சென்ட்

Category விளையாட்டு
Publication நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்
FormatPaper pack
Pages 156
ISBN978-81-2343-279-3
₹120.00 ₹102.00    You Save ₹18
(15% OFF)
Only 1 copy left! Delivery in 4-7 Days
தொலைபேசி வழியாக ஆர்டர் செய்ய அழைக்கவும் 88834 88866"பிற மனிதரின் சீரிய சிந்தனைகளில் நான் என்னையே இழந்து நிற்பதை நான் விரும்புகிறேன். நான் நடக்காதிருக்கும் போதெல்லாம் நான் வாசித்துக் கொண்டே இருக்கிறேன். என்னால் அமர்ந்து சிந்திக்க இயலாது; புத்தகங்கள் தாம் எனக்காகச் சிந்திக்கின்றன,” என்கிறார் “இதமான” (Charm) எழுத்துக்குச் சொந்தக்காரரான புகழ்பெற்ற ஆங்கில இலக்கியச் செல்வர் சார்லஸ் லாம்ப் (Charles Lamb).
"சவி” என அன்போடு அழைக்கப்படும் பேராசிரியர் முனைவர் ச.வின்சென்ட், சார்லஸ் லாம்பின் பார்வையில், நமக்காக, சமூகத்திற்காக, தேசத்திற்காக, இளைய தலைமுறையின் எதிர்காலத்திற்காகச் சிந்திக்கும் சீர்மிகு படைப்பாளர். -
ஆங்கில இலக்கிய ஆழம் தருகின்ற அறிவு விசாலம் கைகொடுக்க, அறிவியல் ஆசானாக அவர் பெற்ற அனுபவமும் ஆய்வும் உடனுதவ, கல்வியியலில் கரைகண்ட அவரது கருத்துச் செறிவு துணை நிற்க, இலக்கியம் - அறிவியல் - கல்வியியல் மூன்றும் ஒரு சேரக் கலந்த மனிதவள மேம்பாட்டுத் திறன்களை, மாணவ மாணவியர்க்கும், இளைய தலைமுறையினர்க்கும் அள்ளி வழங்கும் அறிஞராய், ஆசிரியராய், ஆலோசகராய், மதுரையையும், தமிழகத்தையும் வலம் வந்து கொண்டிருக்கிறார் பேராசிரியர் வின்சென்ட்

உங்கள் கருத்துக்களை பகிர :
பேரா.ச.வின்சென்ட் :

விளையாட்டு :

நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் :